பணவீக்கம் டிசம்பரில் வீழ்ச்சி - இலங்கை மத்திய வங்கி

Published By: Nanthini

31 Dec, 2022 | 04:55 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் இவ்வருடத்தில் (2022) மூன்றாவது முறையாக டிசம்பரிலும்  வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

அதற்கமைய பணவீக்கம் 57.2 சதவீதமாகவும், உணவு பணவீக்கம் 64.4 சதவீதமாகவும், உணவல்லாப் பணவீக்கம் 53.4 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பரில் 61 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், டிசம்பரில் 57.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இவ்வாறு பணவீக்கம் 4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் 9.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

நவம்பரில் 73.7 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம், டிசம்பரில் 64.4 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை நவம்பரில் 54.5 சதவீதமாக காணப்பட்ட உணவல்லா பணவீக்கம், டிசம்பரில் 53.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 0.36 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் விலைகளின் மாதாந்த வீழ்ச்சி இதற்கு பிரதானமாக பங்களித்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆண்டு சராசரி பணவீக்கம் 2022 நவம்பரில் 42.6 சதவீதத்திலிருந்து, டிசம்பரில் 46.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

பொருளாதாரத்தின் அடிப்படை பண வீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் 2022 நவம்பரில் 49.4 சதவீதத்திலிருந்து, டிசம்பரில் 47.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது. 

இதே போன்று ஆண்டு சராசரி மையப் பணவீக்கம் நவம்பரில் 31.4 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 34.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56
news-image

அருவக்காலு குப்பைகளை இறக்குதல், ஏற்றுதல், குப்பைகளை...

2023-05-29 17:37:32
news-image

இந்திய அரசாங்கம் நட்டஈடு கோரியதாக எந்த...

2023-05-29 12:59:56
news-image

பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம்...

2023-05-29 17:28:53
news-image

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் குறித்து அரச...

2023-05-29 17:35:29
news-image

கிளிநொச்சி, நுவரெலியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் உணவுபாதுகாப்பின்மை...

2023-05-29 17:43:41
news-image

ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கொள்ளை...

2023-05-29 16:40:54
news-image

யாழ்.நகரில் விடுதியில் தங்கி இருந்த இரு...

2023-05-29 16:28:23
news-image

சம்மாந்துறைக்கும் சோமாவதிக்கும் சென்ற இரு வேன்கள்...

2023-05-29 16:17:42
news-image

கைதான இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2023-05-29 16:12:12