போர்த்துகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் இணைந்துள்ளார்.
2025 ஜூன் மாதம் வரை இரண்டரை வருடங்களுக்கு அல் நாசர் கழகத்தில் விளையாடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளார் என அக்கழகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கான சம்பள விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அவரின் வருடாந்த மொத்த சம்பளம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், வர்த்தக உடன்டபடிக்கைகள் உட்பட ரொனால்டோவின் வருடாந்த சம்பளம் 200 மில்லியன் யூரோ (சுமார் 7,800 கோடி இலங்கை ரூபா/ 1768.கோடி இந்திய ரூபா) என தகவல்கள் வெளியாகியுள்ள. இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் அது கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகூடிய ஊதியாக அமையும்.
37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலோன் டி'ஓர் விருதை 5 தடவைகள் வென்றவர். கால்பந்தாட்டத்தில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
தனது கால்பந்தாட்ட வாழ்க்கையின் ஆரம்பதில் போர்த்துகலின் ஸ்போர்ட்டிங் சி.பி. கழகத்தில் இணைந்த ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் கழகத்தில் இணைந்து 2009 வரை அக்கழகத்துக்காக விளையாடினார். பின்னர், ஸ்பெய்னின் ரியல் மட்றிட் கழகத்தில் 2009 முதல் 9 வருடங்கள் விளையாடிய அவர், 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜுவென்டஸ் கழகத்தில் இணைந்தார். 2001 ஆம் ஆண்டு அவர் தனது முந்தைய கழகமான இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட்டில் மீண்டும் இணைந்தார்.
எனினும், உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன் ரொனால்டோ அளித்த செவ்வியொன்றில், அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மற்றும் கழக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதன்பின், மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து ரொனால்டோ வெளியேறிவிட்டார் என கடந்த நவம்பர் 23 ஆம் திகதி அக்கழகம் அறிவித்தது.
உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய நிலையில் அவர் புதிய கழகமொன்றில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
இங்கிலாந்தின் செல்சி, ஜேர்மனியின் பயேன் மியூனிக், இத்தாலியின் நபோலி முதலான கழகங்களும் ரொனால்டோவுடன் தொடர்புபடுத்தப்பட்டன.
இந்நிலையில் அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டதுடன், அக்கழகத்தின் அங்கியுடன் அவர் போஸ் கொடுத்துள்ளார். ரொனால்டோவின் அபிமான இலக்கமான 7 அந்த அங்கியில் அச்சிடப்பட்டிருந்தது.
அல் நாசர் கழகமானது சவூதி அரேபியாவின் 9 லீக் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. இறுதியாக 2019 ஆம் ஆண்டுசம்பியனாகியது.
ரொனால்டோவுடனா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டமையானது, 'எமது கழகம் மேலும் பெரிய வெற்றிகளை அடைவதற்கு உத்வேகமாக அமைவது மாத்திரமல்லலாமல், எமது லீக், எமதுநாடு மற்றும் எதிர்கால தலைமுறைகள், சிறுவர்கள், சிறுமிகள் சிறந் நிலையை அடைவதற்கும் உத்வேகமாக அமையும்' என அல் நாசர் கழகம் தெரிவித்துள்ளது.
றியாத் நகரை தளமாகக் கொண்ட அல் நாசர் கழகம் 1955 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. பிரான்ஸின் ரூடி கார்ஸியா இக்கழகத்தின் பயிற்றுநராக பதவி வகிக்கிறார்.
தொடர்புடைய செய்தி
சவூதியின் அல் நாசர் கழகத்துடன் இணைவதற்கு ரொனால்டோ பேச்சுவார்த்தை: கழக வட்டாரங்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM