யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (டிச. 30) மதியம் 1.30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
திரு.கணபதிப்பிள்ளை மகேசன் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செயலாளராகவும், வெளிநாட்டு விவகார அமைச்சின் திணைக்கள பணிப்பாளராகவும் கடமையாற்றி, தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக ஆற்றிவரும் தனது பணியினை நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், காணி மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. நீக்ளஸ்பிள்ளை, விவசாயப் பணிப்பாளர் வாசுகி கமலேஸ்வரன், சமுர்த்திப் பணிப்பாளர் திவாகரன் உள்ளிட்ட பதவிநிலை உயர் அதிகாரிகள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM