காதலர்கள் தங்களின் உண்மையான காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை செய்வது வழமையான ஒன்றாகும்.

அதில் ஒரு புது முயற்சியாக சீனாவில் காதல் திருமணம் செய்த ஒரு காதல் ஜோடி தமது காதலை உடைகளை மாற்றி அணிந்து தமது அன்பை வெளிபடுத்தியுள்ளது.

சீனாவின் சன்ஜிங் மாவட்த்தில் நான்சோங் நகரில் வசிக்கும் ஓ கியான் என்பவருக்கும்  தன் காதலியான வூ சுவாய் ஆகியோருக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காதலியின் உடையலங்காரம் அவரை உடல் பருமன் மிக்கவராக காட்டும் என்பதால் ஓ கியான் தனது உடையை தனது

காதலிக்கு அணிய செய்து காதலியின்  உடையை தான் அணிந்து தனது காதலிக்கு ஏற்படவிருந்த தர்ம சங்கடமான நிலையை மாற்றியுள்ளார்.

தந்தையை இழந்த வூ சுவாய் யாருடைய துணையும் இன்றி ஆண்கள் அணிகின்ற கோட்சூட் உடையில் கண்ணாடி அணிந்து வரவே, அவரின் காதலனான ஓகியான் காதலி அணிய வேண்டிய உடையை தன்னளவிற்கு ஏற்றவாறு தைத்து அணிந்து வரவே மண மேடை விசித்திரமாக மாறியுள்ளது. 

இருப்பினும் இருவரின் காதல் பறிமாற்றத்துடன் அவர்களின் திருமணம் இடம்பெற்றமை  வைபவத்துக்கு வருகை தந்திருந்த  அனைவரையும் வியக்க வைத்துள்ளது.