நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, மலரும் 2023 புத்தாண்டில் மக்கள் வாழ்வியலில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுமென்ற எதிர்பார்ப்புடன், இப்புத்தாண்டினை வரவேற்போமாகவென்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டினை முன்னிட்டு கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் வாழ்த்துச் செய்தியில்,
எமது நாடு எதிர்நோக்கியிருந்த கொவிட் 19 தொற்று மற்றும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றினால், இந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். இது போன்றதோர் அவல நிலைகளிலிருந்து மக்கள் விடுக்கப்படக் கூடிய சமிக்ஞைகள் புத்தாண்டில் தென்பட ஆரம்பித்துள்ளன.
வாழ்வியலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள், விரும்பத் தகாத செயல்பாடுகள், வறுமை, பஞ்சம் ஆகியன அகன்று, புத்தாண்டில் மக்களின் வாழ்வியல்களில் சுபீட்சம், சமத்துவம், சகோதரத்துவம் மலர வேண்டுமென்று, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக. அத்துடன் நாட்டு மக்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM