(எம்.மனோசித்ரா)
சர்வதேசத்தின் உதவிகள் தேவையாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டால் ஒருபோதும் சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை (30) இரண்டாவது நாளாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இரு கட்சிகளும் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளன. பொதுஜன பெரமுனவும் , ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தலைக் கண்டு அஞ்சுகின்றன.
அதன் காரணமாக தேர்தலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு காரணிகளாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவ்விரு கட்சிகளையும் ஒன்றாக தோற்படிப்பதற்கு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்பதை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
இது சர்வதேசத்தின் உதவி நிச்சயம் தேவைப்படும் காலமாகும். எனவே எந்த வகையிலாவது தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் , ஒருபோதும் சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
சர்வதேசத்தின் உதவிகள் தேவையாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.
மக்கள் நிராகரித்த தரப்பினரே இன்று நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் ஆணையுடைய ஆட்சியாளர்களே நாட்டை நிர்வகிக்க வேண்டும்.
மக்களுக்கு வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமை வழங்கப்படாவிட்டால் , ஐக்கிய மக்கள் சக்தி அற்காக போராடும். பாராளுமன்றத்திற்குள்ளும் , சட்டத்தின் ஊடாகவும் எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM