ஆபத்தான வகையில் மோட்டார் சைக்களில் பயணித்த காதல் ஜோடி கைது

Published By: Sethu

30 Dec, 2022 | 01:07 PM
image

மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியில் அமர்ந்து, மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனை கைகளாலும் கால்களாலும் கட்டிப்பிடித்துக்கொண்டு யுவதியொருவர் பயணம் செய்துள்ளார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் நகரில்இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதையடுத்து, இந்த காதல் ஜோடியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 குறித்த காதல் ஜோடி இவ்வாறு பயணம் செய்த காட்சியை அவ்வழியாக சென்ற ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

அந்த வீடியோ வைரலான நிலையில்,  மேற்படி காதல் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் விசாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சமதாநகரை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மே;றகொள்ளப்படும் என விசாகப்பட்டினம் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்