நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞர் அம்பாந்தோட்டை - ஒயரபுர பகுதியிலுள்ள அவரது தந்தையின் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தப்பிச்சென்ற இளைஞர் 21 வயதானவர் என்பதுடன், கொள்ளைச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.