அகில இலங்கை கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

Published By: Digital Desk 2

30 Dec, 2022 | 12:31 PM
image

போதைப் பெருள் துஷ்பிரயோகம்” எச்.ஐ.வி.எய்ட்ஸ் சம்பந்தமாக இளம் சமூதாயத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் 29 வருடங்களாக நடாத்திவரும் தெகிவளை வடக்கு சிங்க சமாஜம் (பிராந்தியம் 306 A2 ), இவ்வருடமும் அதில் ஒன்றான அகில இலங்கை கட்டுரைப் போட்டியை மும்மொழிகளிலும் நடாத்தி, ஒவ்வொரு மொழியிலும் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணப்பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் ஆகியவற்றை கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வித்தியா மாவத்தை கொழும்பு -07ல் அமைந்துள்ள சிங்க சமாஜங்களின் செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற வைபவத்தில்  வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக பிராந்தியம் 306 A2 ன் சிங்காதிபதி லயன் துஷார பீரிஸ் MJF, சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன்,  பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதன், P.D.G லயன் துமிந்த முனசிங்க MJF, வைத்திய கலாநிதிகள் சத்தியா ஹேரத், சரத் சமரகே, எஸ். முருகானந்தன், தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபையின் M.M.G.B ரஷாட் கலந்து சிறப்பித்தனர்.

போதைப் பெருள் துஷ்பிரயோகம் அதன் பின்விளைவுகள் அதற்கு அடிமையானோருக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும், அவர்களின் சமூதாயத்திற்கும் நாட்டுக்கும் ஏற்படும் பெரும் பாதிப்புக்களை இந்நிகழ்ச்சியில் உரையாற்றியோர் எடுத்துரைத்ததோடு, போதைப்பொருட்களுக்கான கேள்வியை குறைப்பது (Demand Reduciton) அல்லது இல்லாதொழிப்பதே சிறந்த ஒரு வழி எனச் சுட்டிக் காட்டினர் “ வருமுன் காப்போம்” (Prevention is Better than Cure) என்பதனையும் வலியுறுத்தினர்.

இந்த வருடப் போட்டியில் மொழிவாரியாக முதல் 5 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூபா 15,000/=  12,500/=, 10,000/=, 7,500/= 5,000/= எனப் பணப்பரிசில்களும், சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

பரிசுப் பெற்றோர் விபரங்கள் பின்வருமாறு

தமிழ் மொழி மூலம்

1ஆம் பரிசு :  செல்வி. தர்மிகா லெட்சுமணன் - V/சைவபிரகாசா மகளீர் கல்லூரி, வவுனியா

2ஆம் பரிசு :  செல்வி. ஆ.சு. பாதிமா சஹாமா - P/ எருக்கலம்பிடி முஸ்லிம் வித்தியாலயம் பாலாவி.

3ஆம் பரிசு :  செல்வி. ஜதுர்ஷிகா சிறிகாந்தன். - T/ ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி, திருக்கோணமலை.

4ஆம் பரிசு :  செல்வன். ளு. அனுஸ்காந்த்- CP/N ஹோல்புரூக் தமிழ் மஹா வித்தியாலயம். அக்கரைப்பத்தனை.

5ஆம் பரிசு :  செல்வி : A.N.பாதிமா அப்ரிதா - BT/BC மிலாத் மகளீர் உயர் பாடசாலை, காத்தான்குடி

சிங்கள மொழி மூலம்

1ஆம் பரிசு : செல்வி. W.V.டேசானி நிமாஷா ஹேமசந்ர - R/B வித்யாசாரா வித்தியாலயம், பலங்கொடை

2ஆம் பரிசு : செல்வி. ஆ.பு. அமின்டியா சத்சரனி அமரசிங்ஹ - K/ மஹாமாயா மகளீர் கல்லூரி கண்டி

3ஆம் பரிசு : செல்வி. M.L.W.சானிகா செவ்வந்தி சாம குமாரி மஹாலேகம் - N/ பொரமடுள்ள மத்திய கல்லூரி, ரிகில்லாகஸ்கட

4ஆம் பரிசு : செல்வி. V.M.விதுனி ஜயனிமா ஜயதிலக - St. பவுல்ஸ் மகளீர் பாடசாலை, மிலாகிரிய, கொழும்பு - 05

5ஆம் பரிசு : செல்வன் : மஹோதா கலன்சூரிய - மஹிந்த வித்தியாலயம் காலி

ஆங்கில மொழி மூலம்

1ஆம் பரிசு : செல்வி. ஆயிசா உவய்ஸ் - BT/BC மீரா பாலிகா சர்வதேச பாடசாலை, காத்தான்குடி

2ஆம் பரிசு : செல்வன். சிவகணேசன் அனன்திகன் - ஹார்ட்லி கல்லூரி பொயின்ட் பெட்றோ

3ஆம் பரிசு : செல்வன். M.D.சனுபா ரன்மெத் - G/தர்மசோகா கல்லூரி, அம்பலங்கொடை

4ஆம் பரிசு : செல்வி. R.A.மனுஜி கஹன்சா- சுஜாதா வித்தியாலயம், மாத்தரை

5ஆம் பரிசு : செல்வி : கஸ்தூரி குணரட்ணம் - V/ விபுலாநந்தா கல்லூரி, வவுனியா.

அத்தோடு 29 வருடங்களாக தொடர்ச்சியாக இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, வெற்றிகரமாக நடாத்தி வரும் பிராந்தியத் தலைவர் லயன் எஸ். இராமச்சந்திரனுக்கு பிரதம விருந்தினர் சிங்காதிபதி  லயன் துஷார பீரிஸ், சர்வதேச சிங்க சமாஜங்களின் தலைவரின் சின்னத்தை, அளித்து கௌரவிக்கப்பட்டதையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சிகளுக்கான சகல உதவிகளையும் தெகிவளை வடக்கு சிங்க சமாஜ தலைவர் லயன் கசுன் கீகனகே, செயலாளர் லயன் சந்தமாலி, லியோ ஆலோசகர் லயன் சுமுது சமரசிங்க,  செல்வி.அ.கிருஷ்ணவேணி, நிகழ்ச்சி நெறிப்படுத்துனர் லயன் துலித பியசேன கே.ஸ்ரீதர ஒன்றிணைந்து வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் நிகழ்ச்சிகளுக்கான முழு அனுசரனையையும், ஹில்ஸ் கெலிவிலே றோட்டறி கழகம் ( Rotary Club of hills KellYville, District 9685, NSW Austrlia) வழங்கியுள்ளமை முக்கியமாக குறிப்பிடபடல் வேண்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46