கல்லிலெழுந்த தீப்பொறியில் நெருப்பைக் கண்டான்
வில்லையெய்திய கனப்பொழுதில் உணவைப் பெற்றான்
முல்லைவனத்தில் துயில்கொள்ள கொட்டிலமைத்து வாழ்ந்தான்
எல்லைவகுத்து உலகமெங்கும் உரிமைச்சட்டம் வரைந்தான்
ஆதிமனிதன் பொருட்கள் பரிமாற்றம் மாட்டுவண்டி
நதியோடும் தரைவழியில் நகரிணைப்பு புகைவண்டி
வீதிதோறும் அதிவேக சொகுசு வாகன குளிரூட்டி
நீதி போற்றும் இறைவனருள் மனிதகுல வழிகாட்டி
வானிலை சுழற்சி பருவத்திலே உருவானது சனப்பெருக்கம்
நானில அழிப்பில் விவசாய உணவு உற்பத்தி முடக்கம்
அழகு சாதன வருகையெங்கும் இயற்கைவள எழில்மாற்றம்
நிலவுவொளியில் பதாகையேந்தும் இளைஞர் போராட்டம்
நூற்றாண்டைக் கடந்த நுளம்புத்தொல்லை மலேரியா காய்ச்சல்
காற்றோடுகலந்த கரியமலவாயு கொரானா பாய்ச்சல்
வீட்டோடுமுடங்க மீட்டரிடைவெளி பயணத்தடை நெறிசல்
மாற்றுவழிதேடி மனிதவுயிர் பாதுகாப்பு மருத்துவ ஆராய்வில்
ஆற்றுநீரை அணைக்கட்டி குளம்காத்தார் மாமன்னர்
நாற்றுப்பயிர் வளம்செழிக்க உணவளித்தார் கமக்காரர்
ஒற்றுமையே உயர்வுதரும் கோசமிட்டு கரம்கோர்த்தார்
கற்றகல்வி மேன்மையுற அந்நியநாடு வலம்வந்தார்.
- 'ஏரிக்கரைச்சுடர்'
எஸ். பி. சித்திரன்
வத்தளை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM