சீனாவிலிருந்து பயணிகள் வருவதை வரையறை செய்வதற்காக புதிய விசா கட்டுப்பாடுகள் மற்றும் கொவிட்19 சோதனைகளுக்கான நடவடிக்கைகளை தென் கொரியா இன்று ஆரம்பித்துள்ளது. கொவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
மிக இறுக்கமான கொவிட்19 பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா, வெளிநாட்டவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தலும் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் நீக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், பெரும் எண்ணிக்கையான சீன மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் விமான ஆசனப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீனப் பணிகள் ஊடாக கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை உலகின் பல நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.
இந்நிலையில், சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தென் கொரியாவுக்கு வருவதற்கு முன்னரும் வந்த பின்னரும் கொவிட் 19 சோதனைக்கு உட்பட வேண்டும் என தென் கொரியா இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதன்படி, சீனாவிலிருந்து தென் கொரியாவுக்கு வருபவர்கள் விமானம் ஏறுவதற்கு 48 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட, கொவிட் 19 பிசிஆர் சோதனை பெறுபேற்றை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட அன்டிஜன் சோதனை பெறுபேற்றை சமர்ப்பிக்க வேண்டும். தென் கொரியாவுக்கு வந்தவுடன் முதல் நாளில் அவர்கள் மீண்டும் பிசிஆர் சோதனைக்கு உட்பட வேண்டும்.
பெப்ரவரி மாதம் வரை இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தென் கொரிய பிரதமர் ஹான் டக் சூ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM