களுத்துறையில் நபரொருவரை கொலை செய்து காரைக் கொள்ளையிட்ட இருவர் கைது

Published By: Digital Desk 5

30 Dec, 2022 | 11:04 AM
image

(எம்.மனோசித்ரா)

களுத்துறை - இங்கிரிய பொலிஸ் பிரிவில் நம்பபான பிரதேசத்தில் நபரொருவரை தாக்கிக் கொலை செய்து , குறித்த நபர் பயணித்துக் கொண்டிருந்த காரை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் காரில் பயணித்துக் கொண்டிருந்த நபரை தாக்கி கொலை செய்து, அவரது கைகளையும் முகத்தையும் கட்டி சடலத்தை கெடகெடல்ல பிரதேசத்தில் வீசி சென்றுள்ளனர். 

பாணந்துறை குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் அலுபோமுல்ல பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமையவே குறித்த சந்தேகநபர்கள் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாந்தோட்டை மற்றும் ஹூங்கம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களால் கொள்ளையிடப்பட்ட கார், கொலை செய்யப்பட்ட நபர் உபயோகித்த 2 கையடக்க தொலைபேசிகள் , சந்தேநபர்களின் 3 கையடக்க தொலைபேசிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40