இந்தியப் பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் : சிதைக்கு தீ மூட்டினார் மோடி

Published By: Digital Desk 2

30 Dec, 2022 | 10:44 AM
image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று வெள்ளிக்கிழமை (டிச. 30) அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கு அகமதாபாத்திலுள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அவரின் மறைவை சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலையும் பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார் மோடி.

அகமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்றார். தொடர்ந்து, தனது தாயாரின் உடலுக்கு மாலையிட்டு, மரியாதை செய்து அவரை வணங்கினார்.

தொடர்ந்து, பிரதமர் தாயாரின் உடல் இறுதிச்சடங்குக்காக எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது, வீட்டில் இருந்து வாகனம் தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் தூக்கி சென்றார்.

பின்னர் உடல் ஊர்தியில் வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியும் தாயாரின் உடலுடன் சென்றார். குஜராத் தலைநகர் காந்திநகரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அங்கு பிரதமர் மோடியின் தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது தாயாரை வைத்தியசாலையில் வந்து சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இரண்டே நாள்களில் பிரதமரின் தாயார் உயிரிழந்துள்ளார். 

100 வயதான ஹீராபென் மோடி, பிரதமரின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசன் கிராமத்தில் வசித்து வந்தார். பிரதமர் தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை அடிக்கடி சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார்.

தொடர்புடைய செய்தி

இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொங்கோவில் தீவிரமாகப் பரவும் எபோலா வைரஸ்...

2026-05-16 14:15:56
news-image

அமெரிக்கா - ஈரான் மோதல் அச்சம்...

2026-05-16 13:55:22
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்...

2026-05-16 11:46:56
news-image

லெபனான் - இஸ்ரேல் போர்நிறுத்தம் மேலும்...

2026-05-16 09:58:42
news-image

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

2026-05-15 18:43:40
news-image

கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல்:...

2026-05-15 16:44:41
news-image

வீட்டின் மீது விழுந்து விமானம் தீப்பற்றி...

2026-05-15 14:01:29
news-image

"அற்புதமான வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன": சீனாவில்...

2026-05-15 14:20:42
news-image

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் எரிபொருள்...

2026-05-15 12:40:02
news-image

அமெரிக்கா - சீனா இடையே புதிய...

2026-05-15 09:10:39
news-image

லத்வியாவில் அரசியல் நெருக்கடி: பிரதமர் எவிகா...

2026-05-15 08:56:54
news-image

ஹோர்முஸ் நீரிணையில் அத்துமீறி நுழைந்தவர்களால் ஈரானிய...

2026-05-14 16:04:20