(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)

இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகைளில்  ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. 

இளைஞர்  ஒத்துழைப்பு,    சுற்றுலாத்துறை, விவசாயம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கலாசாரம் ஆகிய துறைகளிலேயே குறித்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   மற்றும் மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்னிலையில்  இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த  உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.