வில்லியம்சனின் ஆட்டமிழக்காத இரட்டைச் சதம் நியூஸிலாந்தைப் பலப்படுத்தியுள்ளது

Published By: Vishnu

29 Dec, 2022 | 07:17 PM
image

(என்.வீ.ஏ.)

கராச்சி விளையாட்டரங்கில் முதல் இன்னிங்ஸ்களில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட  நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் குவித்த இரட்டைச் சதம் நியூஸிலாந்தை வலுவான நிலையில் இட்டுள்ளது.

Imam-ul-Haq survived through to stumps on Day 4, Pakistan vs New Zealand, 1st Test, Karachi, 4th Day, December 29, 2022

இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு சாதகமான முடிவு கிடைக்கக்கூடும் என்ற நிலை 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் காணப்படுகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (29) ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இமாம் உல் ஹக் 45 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் நௌமான் அலி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல்  உள்ளனர்.

இதன் பிரகாரம் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க நியூஸிலாந்தை விட 97 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது.

Michael Bracewell celebrates after breaking through, Pakistan vs New Zealand, 1st Test, Karachi, 4th Day, December 29, 2022

இதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என கருதப்படுகிறது. கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணித்தியாலத்தில் விக்கெட் விழாமல் தடுப்பதைக் குறியாகக் கொண்டு பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட முனைவதால் அவ்வணி இயல்பாகவே நெருக்கடியை எதிர்கொள்ளும்.

இதேவேளை, வியாழக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 612 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.

அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அணியின் முதலாவது இன்னிங்ஸை டிக்ளயார் செய்வதாக அறிவித்தார்.

தனது இன்னிங்ஸை 105 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த வில்லியம்சன், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 5ஆவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அத்துடன் 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் பெற்ற 25ஆவது சதம் இதுவாகும்.

395 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன், 7ஆவது விக்கெட்டில் இஷ் சோதியுடன் 159 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தார். இஷ் சோதி 65 ஓட்டங்களைப் பெற்றதுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.

இவர்களைவிட நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம் 113 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 92 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அஸாம் 161 ஓட்டங்களையும் அகா சல்மான் 103 ஓட்டங்களையும் சர்ப்ராஸ் அஹ்மத் 86 ஓட்டங்களையும் பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாருஜன் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் இரட்டைச் சதமடித்து...

2025-03-26 14:39:40
news-image

வரலாற்று சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ்! 

2025-03-26 17:00:16
news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08