இன்று நம் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் கிராமபுறங்களில் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வை இழந்துவருகின்றனர்.
மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கு அரசாலும் அரசசார்பற்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களினாலும் பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை உரியவாறு மக்களை சென்றடைவதில்லை என்பதுடன் அத் திட்டங்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.
இருப்பினும் ஒரு சில நிறுவனங்களின் செயற்பாடு இன்றளவும் மக்கள் மத்தியில் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் Via Village Entrepreneur’s Centre என்ற அமைப்பு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல வேலை திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன் அவை உரியவாறு பயனாளிகளை சென்றடைந்து அப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.
இவ் அமைப்பானது வறுமைகோட்டின் கீழ் வாழும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கை பிரதான இலக்காக கொண்டு கடந்த பத்துவருடங்களாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
இன்றைய பொருளாதார சிக்கலான காலகட்டத்தில் எமது உணவுத் தேவையை பூர்தி செய்தல் மிகவும் சவாலானதாக இருக்கின்றது. இவ்வாறான சவாலான பொருளாதார நெருக்கடிகள் பஞ்சம் பட்டினி என்பன ஏற்படும் காலங்களில் இவற்றை சமாளிக்க வீட்டுத் தோட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் அவை தொடர்பான விழிப்புணர்வுகளை இவ் அமைப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருவதுடன் வீட்டுத்தோட்டங்களிற்கிடையிலான போட்டிகளை அறிவித்து அவற்றுக்கு பரிசு தொகைகளையும் அறிவித்துள்ளனர்.
இதன் மூலம் பலர் வீட்டுத்தோட்டங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதுடன் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி பலர் செல்வதற்கு வழி வகுக்கின்றது. தமக்கு தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்வதுடன் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்து மக்கள் பயன்படுத்துவதால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியுமென இவ் அமைப்பின் வவுனியா மாவட்ட உத்தியோகத்தர் தெரிவித்தார்.
வீட்டுத்தோட்டம் என்பது வீட்டின் வளவில் தோட்டம் செய்து பொதுவாக வீட்டுப் பயன்பாட்டுக்கும் அயலாருடன் பகிர்வதற்கும் மேலதிக விளைச்சலை விற்பனை செய்வதும் வீட்டுத் தோட்டத்தின் வரைவிலக்கணமாகும்.
எமது நாடு மட்டுன்றி வளர்ந்த நாடுகளிலும் வீட்டுத் தோட்டம் என்ற விடயம் மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றது. நாம் சந்தைகளுக்கும் கடைகளுக்கும் அலைந்து திரிந்து அதிக விலை கொடுத்து தரமில்லா காய்கறிகளை வாங்குகின்றோம். இதனை தடுப்பதற்கு வீட்டுத் தோட்டம் முக்கியமானதொன்று என இவ் அமைப்பு வெளிப்படுத்தி வருவதுடன் அதை செயற்பாட்டளவிலும் செய்து காட்டிவருகின்றது.
ஒரு மனிதனிற்கு அவன் இயங்குவதற்கு தேவையான சக்திகளை உருவாக்கும் சத்துக்களையும், கனியுப்புக்களையும் வாரி வழங்குவதில் தாவரவழி உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் கிழங்குவகைகள் மிகமுக்கிய பங்காற்றுகின்றன.
உணவு இல்லையேல் மனிதனில்லை எனும் நிலையில், அவ்வுணவை மனிதர்களிற்கு அள்ளித்தருவதில் முதன்மையான இடத்தை வகிப்பது விவசாயம் என்ற விடயத்தை மக்களிடம் கொண்டு சென்ற பெருமை Via Village Entrepreneur’s Centre என்ற அமைப்பையே சாரும் என்பதுடன் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிற்கு முன்மாதிரியாக செயற்படும் இவ் அமைப்பின் செயற்பாடு பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM