ஜனவரி மாத ராசி பலன்கள் 2023

Published By: Ponmalar

29 Dec, 2022 | 04:56 PM
image

மேஷம்

விருப்பத்தை உடனே நிறைவேற்றி கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தன ஸ்தானத்திலும் பஞ்சமாதிபதி பாக்கிய ஸ்தானத்திலும், தொழில் ஸ்தானாதிபதியுடன் தனாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவதாலும், உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். விரைவாக எதையும் செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். உறுதியான தன்மையை பெற்று செயலில் ஈடுபட்டு, உங்களின் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்வீர்கள். செலவினங்களை குறைத்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். தங்க நகைகள் அடிக்கடி அடவு வைக்க வேண்டி வரும். விவசாயத்தில் பெரிய நன்மை இருக்காது.

சந்திராஷ்டம நாட்கள்:
17.01.2023 செவ்வாய் காலை 08.47 முதல் 19.01.2023 வியாழன் பகல் 12.31 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, வெண்மை, பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து வேண்டுதலை சொல்லிவர விரைவில் நடக்கும்.

ரிஷபம்

மனதில் தோன்றியதை தயங்காமல் வெளிப்படுத்தும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் யோகாதிபதியுடன் ராசிநாதன் அமர்வதும் குரு லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழிலில் வளம் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். தெளிந்த மனநிலையுடன் காரியங்களை செயல்படுத்துவீர்கள். சில நேரம் உங்களின் நிலைபாடுகளை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த தேவையான ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் தங்களின் கலை தொழிற்நுட்ப பயிற்சிகளை மேன்மைப்படுத்திக் கொள்வீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் நற்பெயர் வளம் பெறும். படிப்படியாக கடந்த காலத்தை விட முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். சொந்த காலில் நிற்க வேண்டுமென்று நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியை தரும்.

சந்திராஷ்டம நாட்கள்:
19.01.2023 வியாழன் பகல் 12.32 முதல் 21.01.2023 சனிக்கிழமை மாலை 03.09 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு மஞ்சள் பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் ஜெயமாகும்.

மிதுனம்

எதையும் எளிமையாக எடுத்து கொண்டு செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து தைரிய ஸ்தானாதிபதியுடன் இணைந்து ராசியை பார்ப்பதும், தொழிலில் ஸ்தானதிபதி ஆட்சி பெற்று தனஸ்தானத்தை பார்ப்பதும் தனாதிபதி லாபஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் தொழில் மேன்மை பெற செய்யும் சனியின் தாக்கம். இம்மாதம் குறைவதால் அஷ்டம சனி பாதிப்பிலிருந்து மீள்வீர்கள். ஓன்லைன் வர்த்தகம், வங்கி பணிகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து பயன்பெறுவீர்கள். மனிதாபிமான உதவி செய்து பாராட்டுதலைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும்  பொருளாதார நிலையில் மேன்மை அடைவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
21.01.2023 சனிகிழமை மாலை 03.10 மணி முதல் 23.01.2023 திங்கள் மாலை 05.33 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை, பச்சை நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தடைபட்ட காரியம் கைகூடும்.

கடகம்

பிறருக்கு உதவி செய்வதை கொள்கையாகக் கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குருவும் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதனும் யோகாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்திலும் அமர்ந்து குரு ராசியைப் பார்ப்பது, தொழிலில் மிக சிறந்த நல்ல பலனை பெற்றுத் தரும். தன்னை நம்பியவர்கள் வளர்ச்சிக்கு உதவி செய்யும் மனநிலையை பெறுவீர்கள். பல கருத்து வேறுபாடுகளுடன் புரிந்து சென்ற நண்பர்கள் உங்களிடம் வந்து இணைவார்கள். சரியான பாதையை தேர்வு செய்து உங்களின் அன்றாட பணிகளை செய்து வருவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் சிலருக்கு நல்ல பதவி, பொறுப்புகள் வரும். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் வளர்ச்சி கிட்டும்.

சந்திராஷ்டம நாட்கள்:
23.01.2023 திங்கள் மாலை 05.34 முதல் 25.01.2023 புதன் கிழமை இரவு 08.33 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், செம்மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, தென் கிழக்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள நீங்கள் வேண்டியது விரைவில் நடக்கும்.

சிம்மம்

உறுதியான நிலைபாடுகளை செயல்படுத்தி காட்டும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதும் தொழில் ஸ்தானத்தில் யோகாதிபதி அமர்ந்து ராசினை பார்ப்பது உங்களின் தொழிலிலும், பணியிலும் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். ஆறாமிட அதிபதி ஆட்சி பெறுவதும், எட்டுக்குரியவர் ஆட்சி பெறுவது உங்களுக்கு எதிர்பாராத சில அதிர்ஷ்ட பலன் சனி பார்வையால் கிட்டும். தொழில் கடன் பெறும் வாய்ப்பும் அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் வளர்ச்சி மிக பெரிய பலமாக அமையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல வளர்ச்சி பெற்று தரும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும். எதிர்ப்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
25.01.2023 புதன் இரவு 08.34 மணி முதல் 27.01.2023 வெள்ளி இரவு 01.02 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, செம்மஞ்சள், பச்சை.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் கட்டி மூன்று நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள, பொருளாதாரம் மேம்படும்.

கன்னி

இறுதியான முடிவில் மாறாமல் இருக்கும் கன்னி ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், குரு ராசியை பார்ப்பதும் உங்களின் தொழிலில் சில தீர்க்கபடாமல் இருந்து வந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தனி திறமைகளால் சிறந்து விளங்குவீர்கள். நல்ல காரியங்கள் நடக்கும் சிலருக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடிவரும். சொந்த காரியங்களை விரைவில் முடித்துக் கொள்ள நீங்கள் அதற்கான திட்டத்தை துரிதப்படுத்துவீர்கள். அறிவியல் ஆராய்ச்சி, கைரேகை சோதிடத் துறையினருக்கு சவாலான சில காரியத்தை எடுத்து செயல்பட வேண்டி வரும். அரசியலில் நல்ல ஆலோசகராக உங்களின் வாழ்க்கையில் திருப்புமனையாக அமையும். கலைத்துறையினர் நல்ல ஏற்றம் பெற்று, பொருளாதாரத்தை மேம்பட செய்வீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
31.12.2022 சனி மாலை 05.09 மணி முதல் 02.01.2023 திங்கள் இரவு 12.06 மரை.
27.01.2023 வெள்ளி இரவு 01.03 முதல் 30.01.2023 திங்கள் கிழமை காலை 07.45 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, நீலம், செம்மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென் மேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும். சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும் செய்துவர உங்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும்.

துலாம்

வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வித வசதிகளை உருவாக்கும் துலாம் ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு சுகஸ்தானத்தில் ராசிநாதன் யோகாதிபதியுடன் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவதும் தொழில் ஸ்தானாதிபதி ராசியை பார்வையிடுவதும் உங்களின் தொழிலில் இருந்து வந்த தேக்க நிலை மறையும். எதிர்கால திட்டங்கள் செயல்பட துவங்கும். இதுவரை உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனி, பார்வையை மாற்றிக் கொள்வதால் உங்களின் கடந்த காலத்தின் சூழ்நிலை மாறி, நன்மை பெற வழி கிடைக்கும். இனி உங்களின் பல நாட்கள் கனவு படிப்படியாக செயல்பட துவங்கும். நல்ல நண்பர்கள் சேர்க்கையும். அதன் மூலம் சிலருக்கு ஆதாயமும் கிடைக்கப்பெற்று வளம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தடை நீங்கி நலம் பெறுவீர்கள். பொது விடயத்தில் எடுத்த காரியம் கைகூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
02.01.2023 திங்கள் மதியம் 12.07 முதல் 05.01.2023 வியாழன் காலை 09.32 மணி வரையும்.
30.01.2023 திங்கள் காலை 07.45 முதல் 01.02.2023 புதன் மாலை 04.57 மணி வரையும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, சிவப்பு, மெருன் கலர்.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழகிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல நன்மையும் உண்டாகும்.

விருச்சிகம்

அன்பிற்காக எதையும் விட்டு கொடுக்கும் பண்புள்ள விருச்சிக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனின் பார்வையும் குரு பார்வையும் இருப்பதும். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் நற்பலன்களை பெற்றுத் தரும். சொந்த தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் மேன்மையும் உறுதியான மனநிலையும் பெறுவீர்கள். குடும்ப விழாக்களில் கலந்து கொள்வீர்கள். தனி திறமை உண்டாகும். குழந்தை பாக்கியம் பெண்களுக்கு உருவாகும். விளையாட்டு துறையிலும், வெளிநாடு செல்ல விசாவுக்கு காத்திருப்பதும், சிறப்பான நல்ல பலன் பெற்று தரும். சகோதர்களின் மூலம் சிலருக்கு கருத்து வேறுபாடுகளும், சச்சரவும் உண்டாகும். கலைதுறையினருக்கு பிறரின் முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
05.01.2023 வியாழன் காலை 09.33 முதல் 07.01.2023 சனி இரவு 08.48 சனி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
செம்மஞ்சள், சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்கு பூஜை அறையில் இலுப்பெண்ணெயை விட்டு, மேற்கு நோக்கி தீபமிட்டு வணங்கி வர உங்களின் வேண்டுதல்கள் உடனே நிறைவேறும்.

தனுசு

மன தைரியத்துடன் எதையும் சாதித்துக் காட்டும் தனுசு ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் ஆட்சி பெற்றும் மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவதும், யோகாதிபதி சூரியன் ராசியில் அமர்ந்தும் இருப்பது. உங்களின் அன்றாட எதிர்பார்ப்புகளில் மேலோங்கி இருப்பீர்கள். தேவைகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். முதலீடு இல்லாத கமிசன் தொழில்கள் மேன்மை பெறும், கலைத்துறையினருக்கு திடீர் அழைப்பு வந்து புதிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி வரும். புதிய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். அரிய வகையான பொருட்களின் ஆராய்ச்சியில் உங்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். அரசியலில் உங்களுக்கு தனி மரியாதை இருக்கும். செலவுகளை குறைக்க முயற்சிகளை எடுப்பீர்கள். ஏழரை சனி தாக்கம் குறையும் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
07.01.2023 சனிக்கிழமை இரவு 08.49 முதல் 10.01.2023 செவ்வாய் காலை 08.31 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென் கிழக்கு, வட கிழக்கு,

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் நன்மையை தரும்.

மகரம்

எப்பொழுதும் பிறருக்காக வாழ நினைக்கும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதனுடன் யோகாதிபதி இணைவு பெறுவதும். எட்டாம் அதிபதி பனிரெண்டில் அமர்வதும் உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும், அரசியலிலும் மிக பெரிய மாற்றத்தை பெற்றுத் தரும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதை முடிக்கும் வரை அதை பற்றி சிந்தித்து செயல்படுவீர்கள். பொது வாழ்வில் எதையும் பிறருக்கு உதவியாக செய்வதை கொள்கையாக கொண்டு விளங்குவீர்கள். புத்தாண்டு உங்களுக்கு புதிய வரவேற்பாக அமையும். உடல் ரீதியான வருத்தம் குறையும். பெண்களுக்கு மனஅழுத்தம் குறையும். தொழிலாளர்களின் பணி சுமை நீங்கும், எதிர்ப்புகள் குறைந்து சுபிட்சம் பெறுவீர்கள். முன் மாதிரியான சில காரியங்களில் ஈடுபட்டு அனைவரின் வரவேற்பை பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
10.01.2023 செவ்வாய் காலை 08.32 முதல் 12.01.2023 வியாழன் மாலை 06.54 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென் கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, திங்கள்

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து உங்களின் வேண்டுதலைச் சொல்லிவர நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.

கும்பம்

முடிவெடுத்த பின்பு மாறாமல் செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் ராகு தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும் உங்களின் அன்றாட பணிகளில் புதிய உத்வேகத்துடன் செயல்படும் பாக்கியம் கிடைக்கும். உங்களின் அரசியல் பிரவேசம் பிறருக்கு அதிர்ச்சி தந்தாலும். நீங்கள் அதில் நிலைத்து நிற்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். கடந்த கால துன்பங்கள் இந்த மாதம் முதல் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். உங்களின் குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதார நிலை சீராகும்.

சந்திராஷ்டம நாட்கள்:
12.01.2023 வியாழன் இரவு 06.55 முதல் 15.01.2023 ஞாயிறு அதிகாலை 03.04 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், சிவப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, வடக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, வியாழன்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும் ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி வழிபட்டு வர சகல காரியமும் கைகூடும்.

மீனம்

மனதளவில் குழந்தை உள்ளம் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலேயே அமர்ந்து பார்வையிடும் இடங்கள் சிறப்பாக அமையும். பஞ்சாமாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சனி பார்வை ராசியில் அமர்வதும் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இம்மாதம் சனியின் தாக்கம் ராசிக்கு இருப்பதால் சற்று எதையும் நிதானமாக செய்வது நல்லது. புதிய தொழில் வாய்ப்புகள் வந்தாலும் நன்கு யோசித்து செயல்படுவது நன்மையை தரும் முக்கிய விடயங்களை செயல்படுத்தும் போது ஆலோசனை செய்வதும் நன்கு பலன் தரும். கலைதுறையினருக்கு இறைவனின் அனுகிரகத்தால் ஞான சித்தி கிடைக்கும். தொழிலாளர்களின் பணியில் சற்று கவன குறைவு ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. வங்கி மூலம் கடன்கள் பெறுவதும் கடன் அடைப்பதும் உங்களுக்கு அமையும்.

சந்திராஷ்டம நாட்கள்:
15.01.2023 ஞாயிறு அதிகாலை 03.05 முதல் 17.01.2023 செவ்வாய் காலை 08.45 மணி வரை.

அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரகங்களுக்கு ஒன்பது விளக்குகளை ஏற்றி கோளறு பதிகம் வாசித்து வர, சகல காரியமும் சித்தியாகும்.

கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்

கைப்பேசி நம்பர் - 0091-9789341554

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெய்வ திருவுருவங்கள்

2024-02-05 17:10:36