உக்ரைன் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் - நூற்றிற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன

Published By: Rajeeban

29 Dec, 2022 | 02:56 PM
image

உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து ரஸ்யாவின் பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்தன.

உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

தலைநகர் உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன.

100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணை அலை தாக்குதல் என ஜனாதிபதியின் ஆலோசகர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கீவ் ஒடசா உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என  ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி உட்கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஓடேசா உட்பட பல பிராந்தியங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ரஸ்யாவின் சமாதான திட்டத்தை உக்ரைன் நிராகரித்த பின்னரே  இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஸ்யா ஆக்கிரமித்ததை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ரஸ்யா தனது சமாதான திட்டத்தில் தெரிவித்திருந்தது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47