புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எலுவாங்குளம் பகுதியில் இம்முறை சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம் நேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் குறித்த பகுதியில் உட்புகுந்து விவசாய நிலங்களை துவம்சம் செய்துவருவதாக அக்கிராம விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் முறையான மின்சார வேலிகள் இல்லாமையின் காரணத்தினாலே குறித்த காட்டு யானைகள் விவசாயக் கிராமத்தில் உற்புகுவதாக இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் கூறியும் அதிகாரிகள் அசமந்தபோக்காக செயற்படுவதாக அக்கிராம விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தாம் நுன்கடன்களைப் பெற்றும் தங்க நகைகளை அடகு வைத்தும் உரப் பிரச்சனை மற்றும் எரிபொருள் பிரசானைகளுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காட்டு யானைகளின் தொல்லைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவணத்தில் கொண்டு குறித்த பகுதிக்கு யானை வேலியை அமைத்துத் தருமாறும் குறித்த காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்டித் தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM