மீண்டும் கொவிட் அச்சுறுத்தல் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் !

Published By: Digital Desk 2

29 Dec, 2022 | 01:07 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று அதிகரித்துள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை ஒரு பொறிமுறையின் கீழ் நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்களும் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி அவதானமாக செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (டிச. 29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாட்டில் டெங்கு, இன்புளுவன்சா உள்ளிட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் ஒற்றை எண்களில் காணப்படுகின்ற போதிலும் மரணங்களும் பதிவாகி வருகின்றன. தடுப்பூசிகள் வழங்கப்பட்டு கொவிட் தொற்று பரவலானது சுகாதார தரப்பினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.

எனினும் அண்மையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான், ஹொங்கொங் போன்ற நாடுகளில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அசாதாரணமாக அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை சுமார் 525,000 தொற்றாளர்கள் இந்த நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மீண்டுமொரு கொவிட் அலையை எதிர்கொள்ள நேரிடுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் கூட, சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக தொற்றா நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையிலுள்ளோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். பொருளாதார நெருக்கடிகளால் சுகாதாரத்துறையானது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

எனவே சுகாதார அமைச்சும் விரைவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

குறிப்பாக தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ள நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பிரயாணிகளை ஒரு பொறிமுறையின் கீழ் நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஏனைய நாடுகளில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவலால் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற போதிலும் , வருமுன் காப்பதற்கு தயாராக வேண்டும்.

மழையுடனான காலநிலையால் டெங்கு நோய் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையால் , இது தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் கட்டுப்பணம்...

2024-09-11 03:26:47
news-image

சஜித்தினதோ அநுரவினதோ  எதிர்காலத்தை அன்றி உங்களினதும்...

2024-09-11 03:21:25
news-image

ஓமந்தை பகுதியில் ரயில் விபத்து ;...

2024-09-11 02:15:39
news-image

வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு...

2024-09-11 02:03:48
news-image

யாழில் உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக...

2024-09-11 00:07:11
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும்...

2024-09-10 23:12:17
news-image

இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில்...

2024-09-10 19:46:59
news-image

தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட...

2024-09-10 20:57:49
news-image

முதலாளிமார் சம்மேளனம் வழக்குகளை வாபஸ் பெற...

2024-09-10 19:43:45
news-image

மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐவர் கைது

2024-09-10 19:46:29
news-image

3 வயது சிறுமி மீது பாலியல்...

2024-09-10 19:39:00
news-image

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை...

2024-09-10 19:37:55