செப்பு பாத்திரம்

Published By: Devika

29 Dec, 2022 | 12:00 PM
image

ம் முன்னோர்கள் தண்ணீர் சேமித்து வைப்பதற்கு செப்பு பாத்திரங்களையே பயன்படுத்தினார்கள். சமையலுக்கும், உணவு பரிமாறுவதற்கும் செப்பு பாத்தி­ரங்களின் பங்களிப்பு அதிகம் இருந்தது. 

செப்பு பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பயன்படுத்தியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதற்கு தண்ணீரை வடிகட்டும் தன்மை உண்டு. தண்ணீரில் இருக்கும் நச்சுக்­களை நீக்கி தாதுக்களின் மதிப்பை அதி­கரிக்கவும் செய்யும். 

நவீன யுகத்துக்கு ஏற்ப ப்ளாஸ்டிக் போத்தல்­களுக்கு மாற்றாக செப்பு போத்தல்கள் புழக்­கத்துக்கு வந்தி­ருக்கின்றன. செப்பு போத்தலில் நீர் நிரப்பி பருகுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்ப்போம். 

குடல் ஆரோக்கி­யத்தை மேம்படுத்தும்:  

பெரும்பாலானோர் அசிடிட்டி, மலச்சிக்­கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்­சினை­­களால் பாதிக்கப்படுகிறார்கள். இத்­தகைய பிரச்சினைகளால் பாதிப்படையும் குடல் இயக்கத்தை சீராக்க செப்பு உதவும். 

தினமும் காலையில் வெறும் வயிற்­றில் செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்­திருக்­கும் நீரை பருகி வருவதன் மூலம் ஓரிரு வாரங்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம். 

நச்சுக்களை நீக்கும்: 

அடிக்கடி வெளி உணவுகளை சாப்பிடு­ப­வர்களாக இருந்தால், உடலில் இருக்­கும் நச்சுக்களை நீக்குவது மிகவும் முக்­கிய­மானது. செப்பு போத்தல் நீரை பருகுவது நச்சுகளின் தீய விளைவுகளை குறைப்பது மட்டுமின்றி எடை அதி­கரிப்பையும் தடுக்கும். உடலில் சேரும் நச்சுப்பொருட்களையும் எளிதில் வெளியேற்றும். இரத்தத்தையும் சுத்தப்­படுத்திவிடும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: 

செப்பு பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை காலையில் வெறும் வயிற்­றில் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி­யும் பலப்படும். புதிய செல்கள் உற்பத்­திக்கும் செப்பு பாத்திர நீர் உதவும். எனவே, வழக்கமான தண்ணீர் போத்த­லுக்கு மாற்றாக செப்பு போத்தலை பயன்­படுத்து­வது நல்லது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்