சமூக வலைத்தள நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் டுவிட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலும் சிலர் பிரச்சினையை சந்தித்ததாக கூறப்படுகிறது.
டுவிட்டரில் எந்த பதிவுகளையும் காண முடியவில்லை என்றும் 'எர்ரர்' மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பயனர்கள் பலரும் தெரிவித்து இருந்தனர்.
டுவிட்டர் பக்கத்தில் வரும் Error மெசேஜால் அவர்களால் தங்களின் கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு டுவிட்டர் பக்கத்தை டெஸ்க்டாப்பில் Signin செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. டுவிட்டருக்குள் சென்றால் தானாகவே வெளியே வந்துவிடும் வகையிலான பிரச்சினையை சந்தித்தனர்.
எனினும், சில மணி நேரங்களில் மீண்டும் டுவிட்டர் வழக்கம் போல் செயற்படத் தொடங்கியது. எனினும் டுவிட்டர் முடங்கியதாக வெளியான தகவல் பற்றி தற்போது வரை டுவிட்டர் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு நிர்வாக ரீதியிலும் டுவிட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை எலான் மஸ்க் அமுல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான் டுவிட்டர் முடங்கியுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு 3 ஆவது முறையாக இது போல டுவிட்டர் முடங்கியதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM