பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்சவை இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளுக்கு முன்னர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது அரச வாகனங்களை  முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவரை நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல்  வீரவன்ச வாக்குமூலம் வழங்குவதனை வேண்டுமென்றே  தவிர்த்து வருவதாக நிதிமோசடி விசாரணைப்பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.