தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பார்டர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எக்சன் திரில்லர் ஜேனரில் படங்களை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவரான இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பார்டர்'. இதில் அருண் விஜய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்டெஃபி பட்டேல் எனும் புதுமுக நடிகை நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகை ரெஜினா கஸண்ட்ரா, பக்ஸ் எனப்படும் பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM