வெங்கட் பிரபு இயக்கும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

29 Dec, 2022 | 10:22 AM
image

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'மாநாடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கஸ்டடி'.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ' தி வாரியர் ' படப் புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், சம்பத்ராஜ், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜாவும், 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் நேரடியாக இயக்கும் முதல் திரைப்படம் என்பதாலும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தமிழில் முதன்முறையாக அறிமுகமாவதாலும், 'கஸ்டடி' திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றிமாறன் - விமல் - போஸ்...

2024-06-20 17:03:37
news-image

மலையாள ரசிகர்களையும் கவர்ந்த 'மகாராஜா'

2024-06-20 16:44:29
news-image

நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 'லெவன்'...

2024-06-20 16:35:10
news-image

பிரபுதேவா நடிக்கும் 'மூன் வாக்' பட...

2024-06-19 20:12:40
news-image

அமெரிக்காவில் கின்னஸ் சாதனை படைத்த தெருக்கூத்து

2024-06-19 20:18:52
news-image

நடிகர் பரத் வெளியிட்ட காளி வெங்கட்டின்...

2024-06-18 17:16:20
news-image

நடிகை ஹனி ரோஸ் கவர்ச்சியில் கலக்கும்...

2024-06-18 17:21:15
news-image

சொல்லி அடிக்கும் பிரபாஸ் - தில்ஜித்...

2024-06-18 17:22:48
news-image

இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது 'புஷ்பா...

2024-06-18 15:04:32
news-image

புதுமுக நடிகர் விஷ்வந்த் நடிக்கும் 'ராக்கெட்...

2024-06-18 14:46:04
news-image

ஜீ - 5 தளத்தில் வெளியாகி...

2024-06-17 17:30:35
news-image

'பீனிக்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகும் நட்சத்திர...

2024-06-17 16:43:04