இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட உணவு மற்றும் கலாச்சார விழா நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.

இவ்விழாவின் விசேட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மலேசியாவின் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் வரவேற்றார்.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இரு நாடுகளினதும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அவற்றை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் இந்த உணவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இலங்கையின் பிரபல சமையற்கலை நிபுணர் பப்ளிஸ் சில்வா உள்ளிட்ட பல சமையற்கலை நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இவ்விழாவில் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் இலங்கையின் உணவு வகைகளை மலேசியாவில் பிரபல்யம் செய்யும் நோக்குடனான சில விசேட அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.