பாகிஸ்தான் அணியின் முன்­னணி பந்­து­வீச்­சாளர் யசீர் ஷா இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் யசீர் ஷா நியூ­சி­லாந்­திற்கு எதி­ரான ஒருநாள் தொடரின் உத்­தேச அணியில் இடம்­பெற்­றுள்ளார். இந்­நி­லையில் சர்­வ­தேச கிரிக்கெட் சபையால் தடை­வி­திக்­கப்­பட்ட ஊக்க மருந்தை உட்­கொண்ட சந்­தே­கத்தில் அவர் மீது ஊக்­க­ம­ருந்­துக்கு எதி­ரான விதி­யின்­படி கடந்த மாதம் 13ஆம் திகதி பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அவர் உட்­கொண்ட பொருளில் ஐ.சி.சி.யால் தடை செய்­ய­ப்பட்ட குளோர்­ட­லிடோன் பொருள் கலந்­தி­ருப்­பது தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து சர்­வ­தேச கிரிக்கெட் சபை ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை நிறைவு செய்யும் வரையில் யசீர் ஷா சர்­வ­தேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.