நைஜீரிய களியாட்ட விழாவில் கார் மோதியதால் 14 பேர் பலி

Published By: Sethu

28 Dec, 2022 | 08:36 PM
image

நைஜீரியாவில் பிரசித்தி பெற்ற களியாட்ட விழாவொன்றில் பார்வையாளர்கள் மீது கார் மோதியதால் குறைந்தபட்சம் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். 

நைஜீரியாவின் தென் பிராந்தியத்திலுள்ள கலாபர் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்களியாட்ட விழாவில் மோட்டார் சைக்கிளோட்ட சாகசப் பேரணியை பெரும் எண்ணிக்கையானோர் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இம்சம்பவம் இம்பெற்றது.

காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையிலிருந்து அந்நபர், காரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து,பார்வையாளர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் நீடிக்கும் மேற்படி களியாட்ட விழா 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட்19 பெருந்தொற்று பரவலின் பின்னர் முதல் தடவையாக இவ்வருடம் இக்களியாட்ட விழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-17 17:45:07
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40