ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிட மாட்டார் - ஐக்கிய தேசிய கட்சி சவால்

Published By: Vishnu

28 Dec, 2022 | 07:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் சிறந்த நாட்டை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் ஆசிவேண்டி பொன்னறுவை சோமாவதி விகாரை வளாகத்தில் ஆசிர்வாத பிராத்தனை நிகழ்வொன்றை 31ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளோம். 

இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு  கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே  தேர்தலை நடத்த வழி ஏற்படவேண்டும் என பிராத்திக்க இருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு  கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதுதான் பொருத்தம். அதனால் நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் ஆசிவேண்டி நடத்தும் பிராத்தனை நிகழ்வின்போது ஜனாதிபதி தேர்தலை நடத்த வழி ஏற்படவேண்டும் என பிராத்திக்க இருக்கின்றோம். நாட்டில் எந்த சபைகள் இருந்தாலும் பயனில்லை. மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றன. என்றாலும் நாட்டு மக்களுக்கு அது விளங்கியதா? அவை இருந்தாலும் பாரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவும் இல்லை.

நாட்டின் தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் இருக்கும் 225பேரின் பொறுப்புக்கள் என்ன? நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு நாட்டின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டுசெல்வதாகும். உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதா இல்லை என்பதை தேர்தல் ஆணையாளர் மற்றும் அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும். 

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பஸ் ஓட்டாததால் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு சவால் இல்லை. சஜித் பிரேமதாசவின் நடவடிக்கைகளில் நாங்கள் பெருமளவு கரிசணை கொள்ளமாட்டோம். நிவாரணம் வழங்கி இந்த நாட்டை முன்னேற்ற முடியாது. அதேபோன்று சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வரப்போவதில்லை. அவர் எந்த தேர்தலுக்கும் முன்வந்ததில்லை.

அவர் கட்சியின் தலைமைத்துவ பிரச்சினையின் போது, அதில் தீர்மானமிக்க தரப்பை பிரநிதிநிதித்துவப்படுத்தி, பின்னர் வாக்களிப்பு தினத்தில் கரு ஜயசூரியவை அதற்கு நியமித்து,  ரவி கருணாநாயக்கவுடன் சேர்ந்து பிரதி தலைவர் பதவிக்கு சென்றால் தனக்கு வெற்றிபெறலாம் என, தனக்கு வெற்றிபெற முடியுமான பதவிக்காக முன்வந்தார். இறுதியில்  எந்தளவு நல்லவராக இருந்தபோதும் கருஜயசூரிய தோல்வியடைந்தார்.

அதேபோன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்கு வாக்களிப்பு நடத்தவேண்டும் என தொடர்ந்து குரல்கொடுத்துவந்த அவர், இறுதி நேரத்தில் டலஸ் அழகப்பெருமவை முன்னுக்கு அனுப்பி அவர் ஒதுங்கிக்கொண்டார். அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் இதுதான் நடக்கப்போகின்றது. சஜித் போட்டியிட மாட்டார் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் திருமணமான சில மாதங்களில் ஆணொருவர்...

2024-02-27 02:26:06
news-image

ஆடு சென்று பயிர்களை அழித்ததால் 14...

2024-02-27 02:10:26
news-image

கனடாவிலிருந்து மாதகலுக்கு வந்தவர் மூச்சுவிட சிரமப்பட்ட...

2024-02-27 01:58:38
news-image

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள்...

2024-02-27 01:25:46
news-image

 மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு...

2024-02-27 00:02:35
news-image

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி...

2024-02-26 23:16:12
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை செயற்படுத்த...

2024-02-26 23:09:23
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் தமிழ் பண்ணையாளர்களின்...

2024-02-26 22:14:36
news-image

சிறிலங்கன் விமானம் தாமதமாகியதற்கு முகாமைத்துவம் மற்றும் ...

2024-02-26 20:21:38
news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36