வவுனியாவில் சமத்துவக் கட்சியின் வன்னி தலைமையகம் திறந்துவைப்பு

Published By: Nanthini

28 Dec, 2022 | 07:05 PM
image

மத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம் வவுனியா கந்தசுவாமி வீதியில் இன்று புதன்கிழமை (டிச. 28) திறந்துவைக்கப்பட்டது.

அலுவலகத்தின் பெயர்ப்பலகையினை கட்சியின் தவிசாளர் சுப்பையா மனோகரனும், கட்சி அலுவலகத்தினை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமாரனும் திறந்துவைத்தனர். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா மற்றும் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்