இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவர் அலஸ்ரியா குக் டெஸ்ட் அரங்கில் 11000 ஓட்டங்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இன்று நிலைநாட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியின் போது முதல் பந்தில் 2 ஓட்டங்களை பெற்றதனூடாக இவர் 11000  ஓட்டங்களை கடந்துள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து அணியின் கிரேம்  கோச்  8900 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.