தாய்லாந்தின் 3ஆவது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரம் - இலங்கையும் பங்கேற்பு

Published By: Digital Desk 2

28 Dec, 2022 | 02:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ராணி அன்னை மாட்சிமை மிக்க ராணி சிரிகிட்டின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தாய்லாந்தின் மிகப்பெரிய பெஷன் களியாட்டமான '3ஆவது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரம்' சியாம் பராகான் பேங்கொக்கில் உள்ள அரச பராகான் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையும் பங்கேற்றது. தாய்லாந்து நிரந்தர செயலாளர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் தாய் கலாச்சார மற்றும் ஊக்குவிப்பு சங்கம் ஆகியவை இணைந்து இதனை நடத்தின.

இந்நிகழ்வில் புத்தி பெடிக்ஸின்  பணிப்பாளர் தர்ஷி கீர்த்திசேனாவின் பங்கேற்புடன் பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகமும் நிரந்தரப் பணிமனையும் ஒருங்கிணைத்து இலங்கையின்  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  பங்கேற்புக்கு அனுசரணை வழங்கியது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய  பிரதமர் பேராசிரியர் கலாநிதி விசானு க்ருங்காம் பிரதம மந்திரி பிரயுத் சான்-ஓ-சா மற்றும் அரசாங்கம் தாய்லாந்து பட்டு பெஷன் ஷோவை ராணி அன்னையான மாட்சிமை தங்கிய ராணி சிரிகிட்டின் முக்கியமான பாரம்பரியமான தாய் பட்டின் மூலம் ஏனைய நாடுகளுடன் பல்தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் கலாச்சாரப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

'பெஷன் டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் போது தாய்லாந்து பட்டுகளால் செய்யப்பட்ட பாரம்பரிய மற்றும் சமகால ஆடைகளை 60 நாடுகளைச் சேர்ந்த பெஷன் வடிவமைப்பாளர்கள் காட்சிப்படுத்தினர். ஜிம்மி சூ, ரோக்கோ பரோக்கோ மற்றும் டான்ஹா கிம் போன்ற புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் நடுவர் குழுவில் சேர்ந்து பெஷன் மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

'3ஆவது சர்வதேச தாய் பட்டு பெஷன் வாரத்தின்' ஏற்பாட்டுக் குழுவில் தாய்லாந்திற்கான இலங்கைத் தூதுவர் சமிந்த கொலொன்னவின் கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க உட்பட பேங்கொக்கை தளமாகக் கொண்ட தூதரகத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இராஜதந்திர உறுப்பினர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் சர்வதேச வடிவமைப்பு நிறுவனங்கள் ஆடம்பர தரநாமங்களின் பிரதிநிதிகள் ஆடை வடிவமைப்பாளர்கள் வணிகர்கள் மற்றும் பயண முகவர்கள் உட்பட ஒரு நாளைக்கு குறைந்தது 10,000 பார்வையாளர்கள் இந்த நிகழ்வுக்கு வருகை தந்தனர். இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை உள்ளிட்டவை நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரடி சாயி இராஜகோபுர வருடாந்த உற்சவம்

2023-03-29 21:23:02
news-image

மன்னாரில் இளம் இசை, வாத்திய கலைஞர்களுக்கான...

2023-03-29 21:20:52
news-image

பெண்களை வலுப்படுத்துவதற்காக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி

2023-03-29 15:11:54
news-image

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற உலக நீர்...

2023-03-29 14:37:58
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-03-29 15:10:11
news-image

சுதுமலை தெற்கு வேம்படி ஸ்ரீ ஞானவைரவர்...

2023-03-29 12:04:10
news-image

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின்...

2023-03-29 11:11:42
news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02