யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் இன்றைய தினம் திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகும் திருவெம்பாவை பாராயணம் பல்கலைக்கழகத்தினூடாக கலட்டி சந்தியினை அடைந்து, பாலசிங்கம் விடுதியினூடாக தபால் பெட்டி சந்தியினை அடைந்து, பரமேஸ்வரா சக்தியினை அடைந்து, மீண்டும் பரமேஸ்வரா முன்றலில் பாராயணம் முடிவுற்றது.
இதன்பொழுது குறித்த பகுதிகளில் உள்ள ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் பாராயணம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக பத்து நாட்களும் மாணவர்களால் பாராயணம் முன்னெடுக்கப்பட்டு இறுதி நாள் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவெம்பாவை முற்றுபெறவுள்ளது.
மேலும் எதிர்வரும் ஐந்தாம் திகதி திருவெம்பாவையை முன்னிட்டு மார்கழி விழாவும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM