வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாறவில்ல கன்ன ராஜபக்ச அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரின் ஒழுங்குபடுத்தலில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நெளுக்குளம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பண்டாரிக்குளம், உளுக்குளம், நெளுக்குளம், பாவற்குளம் முஸ்லீம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமை கோட்டிற்குட்பட்ட 250 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கன்ன ராஜபக்ச அறக்கட்டளையின் தலைவர் போதகர் சன்ன ராஜபக்ச, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் களகமகே, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ, நெளுக்குளம் பாடசாலை உப அதிபர் சிவநேசன், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM