ஈரானில் இடம்பெறும் ஒடுக்குமுறைகள் குறித்து உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஈரானை சேர்ந்த ஒருவர் பிரான்சில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரான்சின் தென்கிழக்கு நகரான லைனில் ஈரானியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் இடம்பெறும் ஒடுக்குமுறைகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக தற்கொலை செய்துகொள்வதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பின்னர் குறிப்பிட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இஸ்டகிராமில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும்போது நான் உயிரிழந்திருப்பேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
ஆற்றொன்றில் 38 வயதான முகமட் முராடியின் உடலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்;துள்ளனர்.
அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள விடயம் குறித்து உறுதிப்படுத்துவதற்காக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் சிறிய நகரை இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,தற்கொலை செய்துகொண்டவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் குறிப்பிட்ட ஆற்றிற்கு அருகே இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் மெழுகுதிரிகளையும் மலர்வளையங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஈரான் புரட்சியின் குரல் உலகில் ஒலிப்பதற்காக மொராடி தன்னை கொலைசெய்துள்ளார், என தெரிவித்துள்ள ஒருவர் எங்கள் குரல்களை மேற்குலக ஊடகங்கள் பதிவு செய்வதில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM