ஜம்மு-காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தொகுதி 'அக்னிவீர்ஸ்' இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
உடல் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை, எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு உள்ளிட்ட கடுமையான சோதனைகளுக்குப் பிறகு சுமார் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகரில் உள்ள இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்திலிருந்து, இந்திய இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் சுமார் 30 பயிற்சி மையங்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டவுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அக்னிபத் திட்டம் ஆயுதப்படைகளில் இளைஞர்களை சேர்ப்பதற்கான விதிகளை வகுத்துள்ளது.
இந்த விதிகளின்படி, 17 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் அவர்கள் நான்கு ஆண்டு பயிற்சி காலத்திற்கு சேர்க்கப்படுவார்கள். அவர்களில் 25 சதவீதத்தினருக்கு தொடர்ந்து வழக்கமான சேவை வழங்க இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. பின்னர், இந்த ஆண்டு, ஆட்சேர்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பை 23 ஆண்டுகளாக அரசாங்கம் நீடித்தது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேலும் 'வலுவானதாகவும், 'ஊடுருவ முடியாததாகவும்' மாறும் இராணுவத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்காக அதன் இறையாண்மை செயல்பாட்டை செயல்படுத்தும் வகையில் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM