'ராங்கி' சுப்பர் ஹியுமன் கதையல்ல - திரிஷா

Published By: Digital Desk 2

28 Dec, 2022 | 11:44 AM
image

"ராங்கி திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் நடித்திருந்தாலும் அவை இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது ஏனெனில் இந்த திரைப்படம் சுப்பர் ஹியூமன் பற்றிய கதை அல்ல" என ராங்கி திரைப்படத்தின் கதையின் நாயகியான திரிஷா தெரிவித்தார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து எதிர்வரும் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ராங்கி'.

இதில் திரிஷா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். எம் சரவணன் இயக்கத்தில் சக்தி ஒளிப்பதிவு செய்ய, சி. சத்யா இசையில் உருவான இந்தத் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்குபற்றிய நடிகை திரிஷா பேசுகையில், '' இந்த படத்தில் நான் கதையின் நாயகியாக நடித்திருக்கிறேன் என்றாலும், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சக நடிகர் நடிகைகளின் ஒத்துழைப்புடன் எமக்கான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். இது ஒரு உலக அளவிலான திரைப்படம். உஸ்பெகிஸ்தான் நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது. பிறகு மீண்டும் அங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழல் இருந்தது.

இதனை தயாரிப்பு நிறுவனம் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்டு, படக்குழுவினரை மீண்டும் உஸ்பெகிஸ்தான் சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதித்தனர். இதற்காகவே தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு எம்முடைய நன்றிகள். இப்படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கும் பொழுது எந்த ஒரு சிரமமும் இல்லை. சண்டைப் பயிற்சி இயக்குநர் முழுமையான பாதுகாப்பு அளித்து சண்டை காட்சிகளை படமாக்கினார். மேலும் இப்படத்தின் கதை சுப்பர் ஹியூமன் பற்றியது அல்ல. அதனால் சண்டை காட்சிகளை இயல்பாகவும், யதார்த்தமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை அண்மையில் கண்டேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37