ஏழில் புதன் இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...

By Ponmalar

28 Dec, 2022 | 11:42 AM
image

புதன் புத்திசாலித்தனத்தை குறிக்கும் காரக கிரகமாகும். ஏழில் தனித்த புதன் இருப்பவர்களுக்கு எளிதாக இளம் வயதில் திருமணம் நடக்கும். தாய்மாமன் வழி உறவில் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். 

தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வாழ்க்கைத் துணையை சந்தோசமாக வைத்து இருப்பார்கள். 

வாழ்க்கை துணை இளமைப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள. இது ஒரு அலி கிரகம் என்பதால் ஆண்களுக்கு காதலியையும் பெண்களுக்கு காதலனையும் குறிக்கும் கிரகம் என்பதால் திருமணத்திற்கு பிறகும் காதலர்களாக ஆதர்சன தம்பதியராக வாழ்வார்கள். 

தனுசு மற்றும் மீன லக்னமாக இருக்கும் போதும் ரிஷப லக்னததிற்கு ஏழாம் அதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டையில் நின்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை தரும். மற்றபடி தனித்த புதன் எந்த தொந்தரவும் தராது. 

புதனுடன் பகை கிரகங்களான செவ்வாய், சந்திரன், ராகு, கேதுக்கள் சேரும் போது உலகப் போரே நடந்த பாதிப்பு வாழ்கையில் இருக்கும். 

ஊருக்காகவும் உறவுக்காவும் கணவன்-மனைவியாக நடிப்பார்கள். வாழ்க்கை துணை இருக்கும் போதே அவரை அலட்சியப்படுத்தி மற்றவரோடு சிரித்து பேசி வாழ்க்கை துணையை வெறுப்படைய செய்வார்கள். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். ஏழில் புதன் விவாகரத்திற்கு பிறகு கூட சேர்ந்து வாழ்வார்கள். 

புதனின் சேட்டைகளை கணிப்பது கடினம். சென்ற பிறவியில் இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய குற்றத்தின் பதிவால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 

பரிகாரம் 17 வாரம் புதன் கிழமை மகா விஷ்ணுவிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 17 திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு 17 வாரம் இனிப்பு உணவு தானம் தர வேண்டும். புதன்கிழமைகளில் அம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right