மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகளுக்கான சிகிச்சை

Published By: Digital Desk 2

28 Dec, 2022 | 11:41 AM
image

டொக்டர் அருண் கண்ணன்

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் குறிப்பாக தெற்காசியாவில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்பவர்களில் 250 பேரில் ஒருவருக்கு இன்பெக்சன் எனப்படும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு மூன்று காரணங்கள் பிரதானமாக இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, அவர்களுடைய நுரையீரல், பற்கள், தோல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் இருக்கும் தொற்றின் காரணமாக அவர்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் போது தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

அதே தருணத்தில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்யும் நிபுணர்களின் அனுபவம் மற்றும் அதற்கான சத்திர சிகிச்சை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும் மிகக் குறைவாக தொற்றுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு.

பொதுவாக நோயாளியின் உடல் உறுப்புகளிலிருந்து தொற்றுகள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் போது பாதிப்பு ஏற்படாதிருக்க ... அவர்களை சத்திர சிகிச்சைக்கு முன்னர் Antiseptic Wash எனப்படும் பாதுகாப்பு சிகிச்சை வழங்கப்படும்.

சிலருக்கு மிக அரிதாக மூக்கு பகுதியில் கிருமி தொற்று பாதிப்பு இருக்கக்கூடும். மருத்துவ நிபுணர்கள், மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கும் முன்னர் இதற்குரிய பாதுகாப்பு சிகிச்சையினையும் வழங்குவர்.

மேலும் சிலருக்கு சுப்பர்பிஸியல் இன்ஃபெக்சன் என்ற தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட உள்பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும்.

இதனை சில பிரத்யேக பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானித்த பிறகு, மீண்டும் சத்திர செய்யப்பட்ட பகுதியை திறந்து, அங்குள்ள தொற்றுகளை அகற்றுவார்கள். இது மிக அரிதாகவே இருக்கும். அதன் பிறகு ஆண்டி செப்டிக் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்குவர்.

மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்தோ அல்லது ஓரிரு மாதங்கள் கடந்த பிறகோ.. அப்பகுதியில் வலி அல்லது அசௌகரியத்தை உணர்ந்தால்..

இரண்டு வகையான தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இது தொடர்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், பரிசோதனையும் செய்து தொற்று பாதிப்பினை துல்லியமாக அவதானித்து, மீண்டும் அதற்குரிய சிகிச்சையை முறையாக பெற வேண்டும்.

சிலருக்கு செயற்கையாக பொருத்தப்பட்ட மூட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொற்றுகள் ஏற்படக்கூடும். இதனை பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பொருத்தப்பட்ட செயற்கை மூட்டை மாற்றி மீண்டும் சத்திர சிகிச்சை  செய்ய வேண்டியதிருக்கும்.

இதனை ஒன் ஸ்டேஜ் சிங்கிள் ரிவிசன் எனும் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பார்கள். இதன் போது சிலருக்கு ஆன்ட்டி பயாடிக் சீமந்து என்ற முறையில் சத்திர சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வர். 

- தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29