தடை செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து மருந்துகளை பெறுவதற்கு சுகாதார அமைச்சர் முயற்சி - முன்னிலை சோசலிச கட்சி குற்றச்சாட்டு

Published By: Rajeeban

28 Dec, 2022 | 10:49 AM
image

இலங்கையின் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்தி   கூட்டுத்தாபனத்தினால் 2019 இல் தடை செய்யப்பட்ட இந்திய நிறுவனத்திடமிருந்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மருந்துகளை கொள்வனவு செய்ய முயல்கின்றார் என முன்னிலை சோசலிச கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அமைச்சர்;  அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்தி   கூட்டுத்தாபனம்  குறித்து தெரிவித்த தகவல் உண்மையில்லை 2019 இல் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்தி   கூட்டுத்தாபனம  இந்த இந்திய நிறுவனத்தை தடை செய்துள்ளதுடன் அந்த நிறுவனத்திடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளது என தெரிவித்துள்ள முன்னிலை சோசலிச கட்சி தடை செய்யப்பட்ட அல்லது தரமான மருந்துகளை விநியோகிக்காத நிறுவனத்திடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய முயல்கின்றார் எனவும் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது  சில விடயங்களை அமைச்சர் மறைத்துள்ளார் அவர் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியுள்ளார் எனவும் முன்னிலை சோசலிச கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதேவேளை சமீபத்தில் சுகாதார அமைச்சர் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்திற்கான செலவுகளை இந்திய நிறுவனமே பொறுப்பேற்றது எனவும் முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் டிசம்பர் 21 ம் திகதி முதல் 24 ம் திகதி வரை இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனத்தை பார்வையிடுவதற்காக இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டார் இந்த விஜயத்திற்கான செலவுகளை குறிப்பிட்ட நிறுவனமே பொறுப்பேற்றது எனவும் முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சர் இந்த விஜயத்திற்கு அரசபணத்தை செலவிடவில்லை தனியார் பணத்தை செலவிட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்,இதுவே பிரச்சினை அவர் இந்தியாவிற்கு அரச செலவில் விஜயம் மேற்கொள்ளவில்லை, சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் ஒரு நாளைக்கு ஹோட்டல் செலவு 400 டொலர்  என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.

ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான கட்டணம் மட்டுமே இது ஏனைய செலவுகள் குறித்து எங்களிற்கு தெரியாது,விமானகட்டணங்கள் உட்பட ஏனைய செலவுகளிற்காக குறிப்பிட்ட நிறுவனம் எவ்வளவு நிதியை ஒதுக்கியது என்பதும் எங்களிற்கு தெரியாது எனவும் முன்னிலை சோசலிச கட்சி  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04