உற்­பத்­தித்­தி­ற­னுடன் இணைக்­கப்­ப­டாத எந்­த­வொரு சம்­பள அதி­க­ரிப்பும், பாரி­ய­ளவு நெருக்­க­டியை எதிர்நோக்­கி­யுள்ள பெருந்­தோட்­டத்­து­றையில் மேலும் மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என பிராந்­திய பெருந்­தோட்டக் கம்­ப­னி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அறி­வித்­துள்­ளது. இந்தத் துறையின் நிலை­பே­றான செயற்­பாட்­டுக்கு பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் சம்­பளப் பிரச்­சினைக்­கான தீர்வை காண முன்­வ­ரு­மாறும் அழைத்­துள்­ளது.

ஊழி­யர்­க­ளுக்கு தற்­போது வழங்­கப்­படும் சம்­ப­ளத்தில் 1 ரூபாய் அதி­க­ரிப்பை மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பத்தில் உற்­பத்தி செய்­யப்­படும் தேயிலை ஒரு கிலோ­கி­ராமின் விலை 0.52 ரூபா­யினால் அதி­க­ரிக்கும் என சுட்­டிக்­காட்­டிய சம்­மே­ளனம், தொழிற்­சங்­கங்­களின் கோரிக்­கை­யான 1000 ரூபாய்க்கு சம்­பளம் உயர்த்­தப்­ப­டு­மானால், ஒரு கிலோ­கிராம் தேயிலை

யின் உற்­பத்திச் செலவு 197.60 ரூபா­வாக அதி­க­ரிக்கும் எனவும், பெருந்­தோட்டக் கம்­ப­னி­களின் மூல­மாக உற்­பத்தி செய்­யப்­படும் தேயி­லைக்கு சர்­வ­தேச சந்­தை­களில் கேள்வி பெரும் சரிவை எதிர்­நோக்கும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது. கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில், உயர் நிலை தேயிலை விலை ஒரு கிலோ­கிராம் 66 ரூபா­வினால் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன், பெரு­ம­ள­வான பிராந்­திய பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் ஒரு கிலோ­கிராம் தேயி­லையில் 50 ரூபாய்க்கு மேல­தி­க­மாக இழப்பை எதிர்­கொள்­வ­தா­கவும், 2014 ஜன­வரி மாதம் முதல் இந்த நிலை தொடர்­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

பிராந்­திய பெருந்­தோட்டக் கம்­ப­னி­களின் உற்­பத்திச் செலவு தற்­போது காணப்­படும் 450 ரூபா­யி­லி­ருந்து 640 ரூபாய்க்கு உயர்­வ­டையும் எனவும் சம்­மே­ளனம் குறிப்­பிட்­டுள்­ளது கொழும்பு தேயிலை ஏல விற்­பனையில் 2015 நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் சரா­சரி தேயிலை விற்­பனை விலை கிலோ­க்கிராம் ஒன்­றுக்கு 409 ரூபாவாக பதி­வா­கி­யி­ருந்­தது. ஒரு கிலோகிராம் தேயிலை உற்­பத்­தியின் கார­ண­மாக ஏற்­படும் இழப்பு 50முதல் 70 ரூபா­வாக தற்­போது காணப்படும் நிலையில், கோரப்­படும் சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­படும் நிலையில், இந்தத் தொகை 230 ரூபாயை விட அதி­க­ரிக்கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன், கொழும்பு தேயிலை ஏல விற்­ப­னையின் போது பெரு­ம­ள­வான தேயிலை விற்­பனை செய்­யப்­ப­டாமல் காணப்­ப­டு­வதன் மூலம் மேற்­கொள்­ளப்­படும் முற்­ப­தி­வு­க ளிலும் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளமை அவ­தா­னிக்­கப்பட்­டுள்­ளது.

எனவே, தொழிற்­சங்­கங்­களின் கோரிக்­கை­யான தின­சரி சம்­பளம் 1000ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்­பது நிறை­வேற்­றப்­ப­டு­மானால், தின­சரி சம்­பள அதி­க­ரிப்பு 380 ரூபா­வாக அமையும், இது ஊழியர் சம்ப­ளத்­தினால் மட்டும் வரு­டாந்தம் ஏற்படும் செல­வினம் 17.94 பில்லியன் ரூபாயால் அதி­க­ரிக்கும். இது தற் போதைய தேயிலை விலைப் போக்கை கவ­னத்தில் கொள்ளும் போது, சிந் தித்துக்­கூட பார்க்க முடி­யா­தது என குறிப்­பிட்­டுள்­ளது.

70 சத­வீ­த­மான இலங்கைத் தேயிலை ஏற்­று­மதி செய்­யப்­படும் பிர­தான ஏற்­று­மதி நாடு­களில் நிலவும் அர­சியல், பொரு­ளா­தார மற்றும் இரா­ணுவ முறுகல் நிலைகள் கார­ண­மாக தேயிலை விலை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக பிராந்­திய பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் தமது தற்­போதைய சம்­பள பொறுப்­பு­களை நிறை­வேற்­று­வ­தற்குக் கூட பெரு­ம­ளவு சிக்­கல்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளன. இறு­தி­யாக சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­பட்ட 2013 ஆம் ஆண்டில் நில­விய தேயிலை மற்றும் இறப்பர் விலை­களை விடவும் முறையே 66 ரூபாய் மற்றும் 115 ரூபாய் குறை­வான விலையில் தற்­போது சந்­தையில் விற்­ப­னை­யா­கின்­றன.

2014 இல் தேயிலை மற்றும் இறப்பர் ஆகி­ய­வற்றின் மீது பெருந்தோட்டக் கம்­ப­னிகள் மொத்­த­மாக4000 மில்­லியன் ரூபாயை இழப்­பாகபதிவு செய்­தி­ருந்­தன. மேலும், தேசியநிகர விற்­பனை சரா­ச­ரியை கருதும் போது, 2015 ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரையில் கொழும்பு தேயிலை ஏல விற்­ப­னையில் ஏற்­பட்ட வரு­மான இழப்பு கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 18.4 பில்­லியன் ரூபா­வாக அமைந்­துள்­ளது.

ஊழி­யர்­களின் உற்­பத்தித் திறன் போதாமை என்­பதை தொழிற்­சங்­கங்கள் உணர்ந்து, அதை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என கடந்த சம்­பளப் பேச்­சு­வார்த்­தை­களின் போது குறிப்­பிட்­டி­ருந்­தாலும், அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. இலங்கையில் தின­சரி சரா­சரி தேயிலைக் கொழுந்து பறிப்பு 18 கிலோ­க்கி­ராம்­க­ளாக அமைந்­துள்­ளது. இது போட்­டி­கர நாடு­க­ளான கென்யா ,அஸாம் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். ஆனாலும் சம்பளம் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. உர மானியத்தை மீளப்பெறுவது பற்றிய அரசாங்கத்தின் தீர்மானம், கிருமி நாசினிகள் பாவனை தவிர்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான சம்பள பண மீளப்பெறுகைகள் மீதான கட்டண அறவீடு போன்றன பெருந்தோட்ட கம்பனிகளின் மொத்த செலவி னத்தில் மேலும் 5.3 பில்லியன் ரூபாஅதிகரிப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேலதிக செலவினத்தின் மூலமாக, ஒரு கிலோகிராம் தேயிலையின் மேலதிகதாக்கம் 58 ரூபாவாக அமைந்துள்ளது.