நைஜர் இராணுவ ஹெலிக்கொப்டர் வீழ்ந்து தீப்பிடித்ததில் 3 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

28 Dec, 2022 | 09:59 AM
image

நைஜர் இராணுவ ஹெலிக்கொப்டர் வீழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபிரிக்க நாடான நைஜீரியா இராணுவத்துக்கு சொந்தமான மில் எம்ஐ - 17 ரக ஹெலிகொப்டர் ஒன்று, அண்டை நாடான நைஜரின் தலைநகர் நியாமிக்கு புறப்பட்டு சென்றது. ஹெலிக்கொப்டரில் 3 இராணுவ வீரர்கள் இருந்துள்ளனர்.

நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிக்கொப்டர் தரை இறங்க முயற்சி செய்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து ஹெலிக்காப்டர் விமான நிலையத்துக்குள் விழுந்தது.

தரையில் மோதிய வேகத்தில் ஹெலிக்கொப்டரில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்துள்ளனர்.

எனினும் இந்த கோர விபத்தில் ஹெலிக்கொப்டரில் இருந்த 3 இராணுவ வீரர்களும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26
news-image

போதைப்பொருளிற்கு அடிமையானவர் துப்பாக்கியை கொள்வனவு செய்த...

2024-06-11 21:46:47
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

2024-06-11 17:49:44
news-image

விவசாயிகளின் நிதி உதவிக்கான திட்டத்தில் கைசாத்திட்டார்...

2024-06-11 19:09:33
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம்...

2024-06-11 15:37:30