போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது - லிட்ரோ  நிறுவனம்

Published By: Digital Desk 2

27 Dec, 2022 | 08:33 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எதிர்வரும் நாட்களில் நுகர்வுக்கு தேவையான சமையல் எரிவாயு போதுமான அளவு  கையிருப்பில் உள்ளதாகவும் அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

நுகர்வுக்கு தேவையான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளது.கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களின்  பின்னர் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் காரணமாக எரிவாயுக்கு அதிகளவிலான கேள்வி நிலவுகிறது.

நாட்டிற்கு மாதாந்தம் 24,000 மெட்றிக்தொன் எரிவாயு தேவைப்படுகின்ற போதிலும் இந்த மாதம் 35,000 மெட்றிக்தொன் எரிவாயு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி மாதத்திற்கு தேவையான எரிவாயு அளவினை விட மேலதிகமாக 27,000 மெட்றிக்தொன் எரிவாயு கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக நாட்டு மக்கள் அச்சமின்றி எரிவாயு கொள்வனவு செய்ய முடியும்.  இதனிடையே அடுத்த ஆண்டு முதலாவது எரிவாயு விலை திருத்தத்தின் போது விலை குறைவடையும் என்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது.

இதேவேளை, டிசம்பர் மாதத்தில் ஐரோப்பாவில் அதிகளவிலான எரிவாயு நுகரப்படுகின்றமை, ரஷ்யா  - உக்ரேன் யுத்தம் மற்றும் பல்வேறு நாடுகளில் காணப்படும் குளிரான காலநிலை காரணமாக எரிவாயு விற்கான விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17
news-image

சிறப்பு படகுகள் படைப்பிரிவுப் பயிற்சியை நிறைவு...

2026-04-11 14:46:46