முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

Published By: Vishnu

27 Dec, 2022 | 09:20 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிற்கும், பொது நிர்வாக அமைச்சிற்கும் புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த எம்.எம்.பி.கே. மாயதுன்னே, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக செயற்பட்டு வந்த எச்.கே.டி.டபிள்யு.எம்.என்.பி.ஹப்புஹின்னே , பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை கல்வி அமைச்சின் செயலாளராக மீண்டும் எம்.என்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக யு.டி.சி.ஜயலால் மற்றும் நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக வசந்த பெரேரா ஆகியோர் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சின் செயலாளராக எம். யமுனா பெரேரா , முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக எம்.எம்.நஜிமுதீன், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.டபிள்யு.எஸ்.சமரதிவாகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நியமனங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26
news-image

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு...

2026-03-10 14:46:54
news-image

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப்...

2026-03-10 14:20:19
news-image

நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளுக்கு 16...

2026-03-10 14:41:43
news-image

சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்வாதாரக் கைமாற்று

2026-03-10 14:16:30