நாடு கடத்தப்பட்டு ஒரு வருடத்தின் பின் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஜோகோவிச்

27 Dec, 2022 | 04:47 PM
image

உலகின் முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீரரான சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச் இன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தார். 

கொவிட்19 தடுப்பூசி செலுத்தாததால் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் அவர் மீண்டும் அவுஸ்திரேலியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின்போது,  ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து, அவர் நாடு கடத்தப்பட்டதுடன், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு 3 வருட தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

35 வயதான ஜோகோவிச் உலகின் முன்னாள் முதல்நிலை வீரராவார்.  21 தடவைகள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். இவற்றில் 9 அவுஸ்திரேலிய சம்பியன் பட்டங்களும் அடங்கும். தற்போது தரவரிசையில் 5 ஆவது இடத்தில் உள்ளார்.   

கடந்த வருடம் ஜனவரியில், அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளுக்காக, அப்போதைய நடப்புச் சம்பியனான ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதமை சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரை பல நாட்கள் தடுத்து வைத்திருந்த நிலையில், அவரின் விசாவையும் ரத்துச் செய்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

அவுஸ்திரேலிய சட்டப்படி நாடு கடத்தப்பட்டவருக்கு 3 வருடங்கள் விசா வழங்க முடியாது. 

எனினும், நோவாக் ஜோகோவிச் மீதான தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் நீக்கியதுடன், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக விசாவையும் வழங்கியது. 

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டி எதிர்வரும் 16 ஆம்  திகதி ஆரம்பமாகவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குரார்ப்பண WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி...

2023-03-26 10:52:19
news-image

நியூஸிலாந்திடம் 198 ஓட்டங்களால் இலங்கை தோல்வி:...

2023-03-25 15:08:38
news-image

ஒருநாள் போட்டியிலும் சென் தோமஸ் அணியை...

2023-03-24 20:36:06
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு நேரடி தகுதிபெறுவதே...

2023-03-24 17:06:36
news-image

WPL நீக்கல் போட்டியில் மும்பை -...

2023-03-24 17:51:29
news-image

பாகிஸ்தானில் ஆசிய கிண்ண கிரிக்கெட்; பிரிதொரு...

2023-03-24 13:46:54
news-image

ஆஸி. ஆரம்பத் துடுப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை :...

2023-03-24 09:21:18
news-image

டி.எஸ்.எஸ். - மஹாநாம - 17ஆவது...

2023-03-23 16:54:41
news-image

இளையோர் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர்:...

2023-03-23 16:21:36
news-image

மென்செஸ்டர் யுனைட்டட் கழகத்தை வாங்க கத்தார்...

2023-03-23 12:08:50
news-image

முவர்ஸ் கழக வெற்றியில் அசத்திய யாழ்....

2023-03-23 09:32:37
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52