ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பின்போது  மாகாண  சபைகளுக்கான நிதியொதுக்கீடு மற்றும் கிழக்கின்  அபிவிருத்தி செயற்பாடுகள்  உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன்  தற்போது   முஸ்லிம்கள்   எதிர்நோக்கி  வரும் அச்சுறுத்தல்கள் மற்றும்  சவால்கள்  குறித்தும்  கிழக்கு மாகண முதலமைச்சா எடுத்துரைக்கவுள்ளார். 

மேலும் வரவு செலவுத்திட்டத்தில்  மாகாண சபைகளுக்கான  நிதியொதுக்கீடுகள்  கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளமையினால் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட  கிழக்கு மற்றும் வடக்கு  மாகாணங்கள் குறித்து  கவனம் செலுத்தப்பட்டு  அதற்கு  அதிக  நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கிழக்கு  மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தொடர்ந்தும்  வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.