தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்ணர் இரட்டைச் சதம் குவித்தார். இது டேவிட் வோர்ணரின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்பேர்னில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 189 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
அவ்வணியின் சார்பில் மார்கோ ஜேன்சன் (59), கைல் வெரேய்ன் (52) மாத்திரம் அரைச்சதம் குவித்தனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் கெமரேன் கிறீன் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். இது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரின் மிகச் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.
முதல் நாள் ஆட்டமுடிவில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் 2 ஆவது நாளான இன்று ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்ணர் இரட்டைச் சதம் குவித்தார்.
254 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 16 பவுண்டறிகள் உட்பட 200 ஓட்டங்களைப் பெற்ற பின்னர் உபாதையினால் ஓய்வுபெற்றார்.
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் குவித்த 2 ஆவது வீரர் டேவிட் வோர்ணர் ஆவார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் இதற்குமுன் தனது 100 ஆவது போட்டியில் இரட்டைச் சதம் குவித்திருந்தார்.
இன்றைய ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களைப் பெற்றிருந்தது ஸ்டீவ் ஸமித் 85 ஓட்டங்களைப் பெற்றார். ட்ரேவிஸ் ஹெட் 45 ஓட்டங்களுடனும் அகெ;ஸ் கெறி 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தற்போது அவுஸ்திரேலிய அணி 197 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM