வவுனியாவில் காணி அபகரிப்புக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சரிடம் முறைப்பாடு

Published By: Vishnu

27 Dec, 2022 | 02:56 PM
image

வவுனியா காத்தான்கோட்டம் கணேசபுரம் பகுதியில் கடந்த 28வருடங்களாக வசித்து வருகின்றேன். எனது வீட்டின் ஒரு பகுதியையும், இலக்கத்தையும் எனது வீட்டின் பின்புறத்தில் வசிப்பவர் அபகரித்து வருகின்றதாக தெரிவித்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாட்டு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

காத்தான்கோட்டம் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் கடந்த 28வருடங்களாக வசித்து வருகின்றேன். எனது காணிக்கு பின்புறத்தில் வசிப்பவர் தனது இரண்டு பரப்புக்காணியை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார் எனினும் அவரின் காணிக்கும் ஒழுங்கை இல்லை இதனால் எனது காணியின் ஒரு பகுதியையே பயன்படுத்தி வருகின்றார். இவ்வாறான நிலையில் அவரால் பயன்படுத்தப்படும் பாதையையும் எனது வீட்டின் இலக்கத்தையும் அவர் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

இது குறித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டேன். பொலிசார் இரு தரப்பினரையும் அழைத்து எனது காணியை அபரிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தும் அவர் தொடர்ந்தும் எனது காணியை பயன்படுத்துவதுடன் தொடர்ந்தும் எனது முகவரி இலக்கங்களையும் பயன்படுத்தி வருகின்றார்.

எனவே காணி அபகரிப்பு மற்றும் வீட்டின் இலக்கம் என்பன தொடர்ந்தும் அவரால் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39