அரசியலில் பெண்கள் முறையாக உள்வாங்கப்பட வேண்டும் - சிவில் சமூக பெண் பிரதிநிதிகள்

Published By: Ponmalar

27 Dec, 2022 | 02:53 PM
image

பெண்கள் அரசியலில் மதிக்கப்பட வேண்டும். புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது. எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மூலம் திருகோணமலையில் நேற்று(26) இடம்பெற்ற டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பான செயலமர்விற்கு பின்னரான ஊடக சந்திப்பின் போது அதில் கலந்து கொண்ட சிவில் சமூக பெண் பிரதிநிதிகள் மேல்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

ஜனனி திட்டம் ஊடாக நடை முறைப்படுத்தப்பட்ட குறித்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய சிவில் சமூக  பெண் பிரதிநிதிகள்…

இணையத்தளங்கள் ஊடாக பெண்களுக்கு துஷ்பிரயோகங்கள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் போன்றன இடம் பெறுகிறது. இவ்வாறானவற்றை கடுமையான சட்டங்கள் மூலம் அதற்கான தண்டனைகளை வழங்கி பெண் உரிமைகளை பாதுகாக்க  அரசியலில் சரி எதுவாயினும் சரி பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின்போது பெண்களுக்காக 25 வீதமான ஆசனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் வெறும் கண்துடைப்புக்காக ஓரிரு பெண்களே அதில் உள்வாங்கப்பட்டனர்.

இந்த நிலை மாறி எந்த பதவிகளாக இருந்தாலும் பெண்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல்களாயினும் சரி அரசியலில் பெண்களும் முறையாக உள்வாங்கப்பட வேண்டும் அப்போது தான் எமது உரிமைகள் பாதுகாக்கப்படும் என கூட்டாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முப்பெரும்...

2023-03-22 17:23:59
news-image

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய...

2023-03-22 17:03:57
news-image

உலக நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு...

2023-03-22 15:44:32
news-image

ஹமீத் அல் ஹுசேனி தேசிய கல்லூரியின்...

2023-03-22 13:57:07
news-image

அம்பாறையில் 159 ஆவது வருட பொலிஸ்...

2023-03-22 13:03:13
news-image

திருகோணமலையில் வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு!

2023-03-22 13:06:34
news-image

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில்...

2023-03-21 14:23:25
news-image

35 வருடகால அரச கல்விச் சேவையில்...

2023-03-21 13:21:30
news-image

உலக வாய் சுகாதார தினத்தில் பற்சிகிச்சை...

2023-03-21 12:53:24
news-image

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம்...

2023-03-21 12:36:10
news-image

பங்குனி உத்திரத் திருநாளின் தெய்வீக சிறப்புகள்

2023-03-21 11:50:41
news-image

இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தினரின் இரத்த...

2023-03-21 09:43:15