* மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், காய்கறிகள் மற்றும் பழங்களைப் பாதுகாக்க ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கெடாமல் பாதுகாக்க முடியும்.
* காய்கறிகள், பழங்களின் மேல் படரக் கூடிய சில பூஞ்சைகளைத் தடுக்க 3 பங்கு தண்ணீருடன் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பழங்கள், காய்கறிகளை கழுவி, துணியால் துடைத்தெடுத்து உலர வைக்கலாம். வினிகருக்கு பூஞ்சை உருவாகுவதையும், அழுகுவதையும் தடுக்கும் தன்மையுள்ளது.
* புதினா, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, துளசி போன்ற செடிகளின் தண்டுப் பகுதியை நீரில் முழ்கும்படி வைப்பதால், அவை வாடிப்போவதைத் தவிர்க்கலாம்.
* காய்கறிகள், பழங்களைத் தனித்தனியாக வைக்கவும்.
* கத்தரிக்காய், வெண்டிக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளைப் புதியதாக வாங்குவதோடு, முடிந்தவரை விரைவில் சமைக்க வேண்டும். அவற்றை அடுத்த நாளுக்குப் பயன்படுத்த விரும்பினால், பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி, பிரிட்ஜில் வைக்கவும். பேப்பரில் வைத்தால் அதிகப்படியான ஈரப்பதம் உறிஞ்சப்படும்.
* உருளைக்கிழங்கு, வெங்காயம் முளைப்பதைத் தடுக்க குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைக்கவும். இவற்றை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஏனெனில் இவை அதிக அளவில் நீர்கோர்க்க செய்வதோடு, அவற்றின் சுவையும் மாறும்.
* பொதுவாக கீரைகளில் அதிக அளவில் நீர், மண், சேறு இருக்கும். எனவே அவை விரைவில் அழுகிவிடும். எனவே அவற்றை சுத்தம் செய்து பேப்பரில் சுற்றி வைப்பதன் மூலம் வைத்து பயன்படுத்தலாம்.
* கதவு, ஜன்னல்களை காலையில் திறக்காதீர்கள். ஏனெனில் பனிக்காலத்தில் மகரந்த சேர்க்கையின் பரவல் அதிகம் இருப்பதால் தொற்றுகள் அதிகம் பரவும்.
* பச்சை வெங்காயத்தில் ஒவ்வாமையை விரட்ட கூடிய ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. உணவு எடுத்து கொள்ளும்போது சில துண்டுகள் பச்சையாக எடுத்து கொண்டால் அலர்ஜியிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
* சளி உடலில் உறைவதை முற்றிலும் தவிர்க்கவும். குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியம். இதற்கு தேநீரில் அடிக்கடி ஏலக்காய், லவங்கம், அதிமதுரம் ஆகியவற்றை கலந்து குடித்தால் சளி கட்டுக்குள் இருப்பதுடன் உடல் வெப்பநிலையும் சீராகும்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM